Published : 25 Dec 2020 10:12 AM
Last Updated : 25 Dec 2020 10:16 AM

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: தனுசு ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

sani-peyarchi-2020

தனுசு ராசி வாசகர்களே

மற்றவர்கள் பயந்து பின்வாங்கும் செயல்களைத் தானாக முன்வந்து தைரியமாகச் செய்யும் ஆற்றலுடைய நீங்கள், உங்களை மதியாதவர்களுக்கும் மறுக்காமல் உதவுபவர்கள். எப்போதும் நியாயத்துக்காகப் போராடும் நீங்கள், மனசாட்சியை முக்கியச் சாட்சியாக நினைப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து உங்களைப் பைத்தியம் பிடிக்க வைத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகிப் பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார் பணப்புழக்கம் அதிகரிக்கும்.


இதுவரை எதிர்மறை எண்ணங்களுடன் இருந்தீர்களே! பலரையும் நம்பி ஏமாந்தீர்களே! யாருமே தன்னை மதிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டீர்களே! திருமணம் போன்ற விசேஷங்களில் சிலர் உங்களை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தினார்களே! இனி இவையெல்லாம் மாறும். எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடு களும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை நீங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். இனி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிப்படையாகப் பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். முடிந்தவரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.

பார்வைக் கோளாறு, பல்வலி வந்து நீங்கும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சொந்தபந்தங்களிடம் உரிமையுடன் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் தாமதமாகி முடியும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். சனிபகவான் 29.03.2023 முதல் 24.08.2023 வரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் வந்து அமர்வதால் இக்காலக்கட்டத்தில் உங்களின் புகழ், கௌரவம் உய ரும். பணபலம் கூடும். சனிபகவான் ஆட்சிப் பெற்று அமர்வதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.

சனிபகவான் உங்களின் நான்காம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். உங்களின் லாபவீட்டைப் பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. பங்குவர்த்தகத்தால் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீங்கள் சரியாக மதிப்பதில்லை என்று மூத்த சகோதரர்கள் நினைப்பார்கள்.

சனிபகவானின் நட்சத்திரப் பலன்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் எதையும் துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை கிட்டும். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். புதுவீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் பழைய வழக்குகள், பொருள் இழப்புகள் வரக்கூடும்.

திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் பணத்தட்டுபாடு, காரியத்தடை என வந்து நீங்கும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்கித்துக்குச் செல்வதால் திடீர் யோகம், எதிர்பாராத உதவி, பண வரவு எல்லாம் உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். புதிய சொத்துச் சேர்க்கையுண்டு. இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை உள்ள காலத்தில் சனிபகவான் வக்கிரமடைவதால் பிள்ளைகளால் அலைச்சலும், படபடப்பும் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள்.

ஊழியர்கள் இனி முரண்டு பிடிக்கமாட்டார்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். தள்ளிப்போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். கொடுக்கல் வாங்கலில் நிம்மதி ஏற்படும். உணவு, இரும்பு, ஊகவணிக வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். உத்தியோகத்தில் நிலையற்ற சூழல் நிலவியதே! இனி அதிகச் சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களை கசக்கிப் பிழிந்த அதிகாரி வேறிடத்துக்கு மாறுவார். அலுவலகத்தில் அதிகம் பேச வேண்டாம். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். இந்த சனி மாற்றம் அழகையும், ஆரோக்கியத்தையும் தருவதுடன் பணவரவையும், பாதுகாப்புணர்வையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

சென்னை பல்லாவரம் அருகிலுள்ள பொழிச்சலூரில் அருள்பாலிக்கும் வடதிருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவானை கேட்டை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நினைத்து நிறைவேறும்.


சனிப்பெயர்ச்சி பலன்கள்சனிப்பெயர்ச்சிஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்பரிகாரம்20202023Sani peyarchi 2020Sani peyarchiதனுசு ராசி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x