மார்கழியில் பிரம்ம முகூர்த்தத்தில் ஆலய தரிசனம்

மார்கழியில் பிரம்ம முகூர்த்தத்தில் ஆலய தரிசனம்
Updated on
1 min read

மார்கழியில் பிரம்ம முகூர்த்தத்தில் அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள். முடிந்தால், திருப்பள்ளியெழுச்சி காலத்தில், சிவ தரிசனமும் பெருமாளின் தரிசனமும் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். மங்கல காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும்.

மார்கழி மாதம் வழிபாட்டுக்கு உகந்த மாதம். மார்கழி மாதம் என்பது தியானம் முதலான பயிற்சிக்கு உகந்த மாதம். மார்கழி மாதம் என்பது மந்திரஜபங்களில் ஈடுபடுவதற்கான மாதம். மார்கழி மாதம் என்பது கலை, கல்வி முதலானவற்றில் ஈடுபடும் காலம். ‘மாதங்களில் நான் மார்கழி’ என மகாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரத்தில் தெரிவித்துள்ளார்.

மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்பார்கள். இந்த மார்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் ஆண்டாள் அருளிய திருப்பாவை தினமும் பாடப்படும். அதேபோல மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை சிவாலயங்களில் பாடப்படும்.

மார்கழி மாதத்தில் மட்டும் பெரும்பான்மையான ஆலயங்களில், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் கோயிலின் நடை திறக்கப்பட்டுவிடும். காலையில் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடந்தேறும்.

அந்த சமயத்தில் ஆலயங்களுக்குச் செல்வதும் வழிபடுவதும் மிகுந்த பலன்களை அள்ளித் தரும் என்கிறார்கள். குளிர்ந்த அதிகாலைப் பொழுதில், நீராடிவிட்டு, ஆலயத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து பிராகார வலம் வந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துவிட்டு, மனதார வேண்டிக்கொள்வது தேகத்துக்கும் நல்லது. வாழ்க்கையிலும் நற்பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மார்கழி மாதத்தில், சிவ வழிபாடு செய்வதும், பெருமாள் வழிபாடு செய்வதும் ரொம்பவே விசேஷம். ஆலயம் சென்று தரிசிக்க இயலாதவர்கள், அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் விளக்கேற்றி, திருப்பாவையும் திருவெம்பாவையும் பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம்.

காலை 4.30 முதல் 6 மணி வரை வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்தால், மகாலக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கப் பெறலாம். பிரம்ம முகூர்த்தத்தில், பூஜைகளில் ஈடுபடுவதும் லக்ஷ்மி அஷ்டோத்திரம் ஜபிப்பதும் மந்திர ஜபங்களில் ஈடுபடுவதும் மகோன்னதமான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அருகில் உள்ள ஆலயங்களுக்கு வாரத்தில் இரண்டு மூன்று நாட்களேனும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள். சுபிட்சம் இல்லத்தில் குடிகொள்ளும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in