’கண்களின் கடவுள்’ பாண்டிச்சேரி மதர்!  

’கண்களின் கடவுள்’ பாண்டிச்சேரி மதர்!  
Updated on
2 min read

’’மனித மனதில் மட்டுமே அன்பு இருப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அது உலகெங்கும் நிறைந்திருக்கிறது. உயிரற்ற கல், மண் முதலானவற்றில் கூட அன்பு உள்ளது. ஆகவே, எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள்’’ என்கிறார் பாண்டிச்சேரி மதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ அன்னை.
அன்பின் உருவமாக வாழ்ந்தவர் ஸ்ரீஅன்னை. அன்னை என்றும் மதர் என்றும் பாண்டிச்சேரி மதர் என்றும் அழைக்கப்படும் அன்னையை ‘நேத்ரா தேவி’ என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள்.

நேத்ரம் என்றால் கண். அன்னையை கண்களுக்கான கடவுளாகவே போற்றித் துதிக்கின்றனர் பக்தர்கள்.

கண்களுக்கான கடவுள்... அன்னை. அதனால்தான், அன்னையின் கண்கள் மட்டும் உள்ள புகைப்படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனர் பக்தர்கள். அன்னையின் கண்களைக் கொண்ட படத்தை, பூஜித்து வந்தால் நம் வீட்டில் உள்ள எவருக்கும் கண் தொடர்பான பிரச்சினைகள் வரவே வராது. இப்போது கண் குறைபாடு எவருக்கேனும் இருந்தால், அன்னையின் கண் படத்தை பூஜையறையில் வைத்து தினமும் பிரார்த்தனை செய்யத் தொடங்கினால், கண் பார்வைக் கோளாறுகள் முற்றிலுமாக நீங்கும்.

மனிதர்களுக்குள்ளே இருக்க வேண்டிய அன்பு, பக்தி, நம்பிக்கை, ஆனந்தம் முதலான தெய்வீக குணங்கள் மலர்களுக்கும் இருக்கின்றன. இவற்றை தன் பக்தர்களுக்குப் புரிந்து உணர வைத்தார் அன்னை.

பக்தர்கள் தங்களது சில குறிப்பிட்ட பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதற்காக, ஸ்ரீஅன்னை பரிந்துரைத்த மலர்களை, ஸ்ரீஅன்னையின் திருவுருவப் படத்தின் முன்பு சமர்ப்பித்து வேண்டிக் கொள்கின்றனர் பக்தர்கள்.

வாழ்க்கையில் ஏற்றங்கள் கிடைத்திட ஒற்றை ரோஜாவை அன்னைக்குச் சூட்டி வேண்டிக்கொள்ளுங்கள். எல்லோரிடமும் பாசமும் பிரியமுமாக இருக்கவும் எல்லோரும் நம் மீது அன்புடனும் கனிவுடனும் திகழ செம்பருத்திப் பூவை அன்னைக்குச் சூட்டி வேண்டிக்கொள்ளலாம்.

தீமைகளும் துன்பங்களும் நீங்க வேண்டுமெனில், டிசம்பர் பூக்களும் மனதில் உள்ள சஞ்சலங்களும் பயமும் விலகுவதற்கு, சாமந்திப்பூக்களும் எடுத்துக்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் முழுமையாக ஈடுபடும் எண்ணம் மேலோங்க இட்லிப்பூவையும் சமர்ப்பித்து வேண்டிக்கொள்வார்கள்.

மனதில் துணிவும் உறுதியும் வேண்டுவோர் எருக்கம்பூ சமர்ப்பிக்கலாம். செல்வமும் சகல ஐஸ்வரியங்களும் பெற வேண்டுமெனில் நாகலிங்கப்பூவை சமர்த்தித்து வேண்டிக்கொள்ளலாம். மனதியும் கோபம் தணிந்து எல்லோரிடத்தும் அன்புடனும் வாஞ்சையுடனும் வாழ வேண்டும் என்போர் அல்லிப்பூக்களை அன்னைக்குச் சார்த்தி வேண்டிக்கொள்ளலாம்.

தூய சிந்தனைகளுக்கு, நல்ல எண்ணங்களுக்கு மல்லிகைப்பூக்களையும் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற மஞ்சள் நிறம் கொண்ட பூக்களை சமர்ப்பிக்கலாம் என்கின்றனர் பக்தர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in