Last Updated : 18 Dec, 2020 09:50 PM

 

Published : 18 Dec 2020 09:50 PM
Last Updated : 18 Dec 2020 09:50 PM

வளர்பிறை பஞ்சமியில் வாராஹியை வணங்குவோம்; எதிர்ப்புகள் விலகும்; எதிரிகள் பலமிழப்பார்கள்! 

பஞ்சமி திதியில், வராஹி தேவியை வழிபட்டால், சகல தீயசக்திகளும் தலைதெறிக்க ஓடும். முக்கியமாக, வளர்பிறை பஞ்சமியில் வாராஹி தேவியை வணங்கி வழிபட்டால், அனைத்து தடைகளையும் நீக்கி அருளுவாள் தேவி என்கின்றனர் பக்தர்கள். நாளை 19ம் தேதி சனிக்கிழமை பஞ்சமி. மறக்காமல், வராஹியை மனதார வணங்குங்கள்.

உலகையாளும் மகாசக்தி என்று போற்றப்படுகிறாள் பராசக்தி. சிவத்துக்கே சக்தியாகத் திகழக் கூடிய பராசக்தி, அசுரக்கூட்டங்களை ஒழிப்பதற்காக, அழிப்பதற்காக ஒவ்வொரு சக்தியாக வெளிப்படுத்தினாள் என்கிறது புராணம்.

அசுரக்கூட்டங்களையும் தீய சக்திகளையும் அழித்தொழித்தவர்களில் வாராஹியும் ஒரு தேவதை. பராசக்தியிடம் இருந்து அப்படி வந்த சக்திகளில், ஏழு தேவதைகள், ஏழு சக்திகள் மிக மிக முக்கியமானவர்கள். அந்த ஏழுபேரும் சப்த மாதர்கள் என்று போற்றப்படுகிறார்கள். போற்றி வணங்கப்படுகிறார்கள்.

சப்த மாதர்களில் பிரமாண்டமான வீரியமும் எதிரிகளை அழிப்பதில் வேகமும் துடிப்பும் கொண்டு நம் அபயக்குரலுக்கு ஓடோடி வருபவள் வாராஹிதேவி. சப்தமாதர்களில் மிக மிக முக்கியமானவள் வாராஹி.

சப்தமாதர்களுக்கு சந்நிதி என்பது சோழர்கள் காலத்தில் பல ஆலயங்களில் அமைக்கப்பட்டன. யுத்தம் முதலான முக்கிய நிகழ்வுகளின் போது, சப்த மாதர்களுக்கு படையல் போடப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டன. போருக்குச் செல்வதற்கு முன்னரும் போருக்குச் சென்று விட்டு வந்த பிறகும் சப்தமாதர்களை வழிபட்டார்கள் என்று விவரிக்கிறார்கள் கல்வெட்டு ஆய்வாளர்கள்.

தஞ்சாவூர் பெரியகோயிலில் வாராஹியை தரிசிக்கலாம். ஆனால் ராஜராஜ சோழன் வாராஹி தேவிக்கு, பெரியகோயிலில் சந்நிதி எழுப்பவில்லை. பின்னாளில்தான், அதுவும் சமீபத்தில்தான் வாராஹியின் சிலையைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. வராஹியை வணங்கி வருகிறார்கள் பக்தர்கள்.

பஞ்சமி திதி என்பது வாராஹியை வழிபடுவதற்கான மிக முக்கியமான நாள். இந்தநாளில், மனதார வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எல்லா நல்லதுகளும் நடத்தித் தருவாள் வாராஹி. வளர்பிறை பஞ்சமிதான் ரொம்பவே சிறப்பு வாய்ந்தது என்றாலும் தேய்பிறை பஞ்சமியிலும் வராஹியைத் தரிசிக்கலாம். விளக்கேற்றி வழிபடலாம்.

நாளைய தினம் 19ம் தேதி பஞ்சமி திதி. வளர்பிறை பஞ்சமி திதி. இந்தநாளில், வாரஹியை வழிபடுங்கள். வாராஹி தேவியின் மூலமந்திரம் சொல்லி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். அருகில் வராஹி சந்நிதி அமைந்திருக்க்கும் ஆலயத்துக்குச் செல்லுங்கள். வழிபடுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள்.

மாலையில் வீட்டில் விளக்கேற்றுங்கள். பூஜையறையில் அமர்ந்து வாராஹி அம்மனை மனதுக்குள் கொண்டு வந்து, மூலமந்திரம் சொல்லி, காயத்ரி சொல்லி, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். தீயசக்திகளையெல்லாம் அழித்து நம்மைக் காத்தருள்வாள் தேவி என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
***********************

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x