Last Updated : 10 Dec, 2020 10:37 PM

 

Published : 10 Dec 2020 10:37 PM
Last Updated : 10 Dec 2020 10:37 PM

சுவாமிநாத சுவாமிக்கு அரோகரா! 

கார்த்திகை வெள்ளிக்கிழமையில் சுவாமி மலை முருகப் பெருமானை மனதார தரிசித்து வேண்டிக்கொண்டால், செவ்வாய் தோஷம் விலகும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். மங்கல காரியங்கள் தடையின்றி நிகழ்த்தித் தருவான் சுவாமிநாத சுவாமி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

முருகக் கடவுளின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடு என்று போற்றப்படும் திருத்தலம் சுவாமிமலை. திருவேரகம் என்று இந்தத் தலத்தை போற்றுகிறது புராணம்.
சிவபெருமானே சுவாமி. அந்த சுவாமிக்கே நாதனாகத் திகழ்ந்தார் முருகப் பெருமான். பிரணவ மந்திரத்தை உபதேசித்து அருளிய ஒப்பற்ற திருத்தலம் இது. இந்தத் தலத்தில் அமைந்திருக்கும் வெற்றிவேலன், தன் தந்தையார் சிவபெருமானுக்கு குருவாகவே இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த திருத்தலம் இது!

முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் இந்தத் தலத்து முருகன் அழைக்கப்படுகிறார். சுவாமிக்கே நாதன் என்பதால் இந்தத் தலம் சுவாமிமலை என்று அமைந்தது.

தஞ்சாவூரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது சுவாமி மலை. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்தத் தலம்.

படைப்புத் தொழிலில் ஆணவத்தில் இருந்த பிரம்மா, முருகப்பெருமானை சந்திக்கும் தருணத்தில், பிரம்மாவிடம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் சொல்லுங்கள் எனக் கேட்டார்.

பிரம்மா பதில் சொல்ல முடியாமல் தவித்தார். பாலகன் முருகக் கடவுள், பிரம்மாவின் சிரசில் குட்டினார். சிறையில் அடைத்தார். பதறிப் போனார் சிவபெருமான். அப்பன் சிவனார் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பிரம்மாவை விடுவித்தார். அதன் பின்னர், பொருள் சொல் என்று கேட்டார் சிவபெருமான். சிஷ்ய பாவனையில் அமர்ந்து குருவாக மைந்தன் முருகப் பெருமானை பாவித்து, ஓம் எனும் பிரணவப் பொருளைக் கேட்டார் சிவனார். . அப்பனுக்கே குருநாதனானார். சுவாமிக்கே நாதனானார் முருகக் கடவுள்.
அதனால்தான் சுவாமிநாதன் என்று திருநாமம். சுவாமிமலை என்ற பெயர். தகப்பன் சாமி என்று வெற்றிவேலவனுக்கு பெயர் அமைந்தது.

கார்த்திகை வெள்ளிக்கிழமையில் சுவாமி மலை முருகப் பெருமானை மனதார தரிசித்து வேண்டிக்கொண்டால், செவ்வாய் தோஷம் விலகும். ஞானமும் யோகமும் கிடைக்கப் பெறலாம். மங்கல காரியங்கள் தடையின்றி நிகழ்த்தித் தருவான் சுவாமிநாத சுவாமி என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x