கார்த்திகை சஷ்டி... கந்தனை வணங்குவோம்; கவலைகள் பறந்தோடும்! 

கார்த்திகை சஷ்டி... கந்தனை வணங்குவோம்; கவலைகள் பறந்தோடும்! 
Updated on
1 min read

கார்த்திகை மாத சஷ்டியில்... கந்தக் கடவுளை வணங்குவோம். நம் கவலைகளையெல்லாம் பறந்தோடச் செய்வான் முத்துக்குமரன். இன்று 6ம் தேதி கார்த்திகை மாதத்தின் சஷ்டி.

சஷ்டி என்பது சக்திவேலனுக்கு உரிய நாள். தை மாத பூசம், பங்குனி உத்திரம், வைகாசியின் விசாகம், ஆடியின் கிருத்திகை முதலானவையெல்லாம் முருகனுக்கு உகந்த அற்புதமான நாட்கள். இந்தநாட்களில், முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், விசேஷ வழிபாடுகளும் பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும்.

கார்த்திகை மாதம் அற்புதமான மாதம். கார்த்திகை என்பதே முருகப் பெருமானைக் குறிக்கும். கார்த்திகை மாதத்து சஷ்டி மிக உன்னதமான நன்னாள். ஞாயிற்றுக்கிழமை என்பதை சூரிய பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்தநாளெல்லாம் கூடி வந்திருக்கும் இன்றைய நாளில், கந்தபெருமானை வணங்குங்கள்.

கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து கந்தபெருமானை வணங்குங்கள். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமண வரம் கைகூடும். கேட்ட வரங்களைத் தந்திடுவான் கந்தன். வீடு மனை யோகத்தை அளித்திடுவான். செவ்வாய் தோஷத்தை நீக்கிடுவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்திடுவான் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஆகவே. வேலவனை வேண்டுவோம். வேதனைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் வெற்றிவடிவேலன்.

முருகப்பெருமான், உலகாளும் சிவபெருமானின் மைந்தன் என்றாலும் ஞானகுரு என்றே முருகப்பெருமானைப் போற்றுகிறது புராணம். பிரணவப் பொருளை எடுத்துரைத்தவன், அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் என்றெல்லாம் புகழ்கிறது புராணம். அப்பேர்ப்பட்ட முருகன். ஞானத்தையும் யோகத்தையும் தரக்கூடியவன்.
செவ்வாய்க்கு அதிபதி முருகக் கடவுள். முருகப்பெருமான் பூமிகாரகன். செவ்வாய் பகவானை வழிபடுவதும் முருகப்பெருமானை வழிபடுவதும் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள அங்காரகனை வழிபடுவதும் மிகுந்த பலன்களை தந்தருளக்கூடியது என்கிறார்கள் பக்தர்கள்.

எனவே, முருகப்பெருமானை தரிசியுங்கள். வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.
சொந்த வீடு வாங்கும் விருப்பம் தள்ளிப்போகிறதே என்றிருப்பவர்கள், முருகப்பெருமானுக்கு எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.

கேட்ட வரங்களைத் தந்திடுவான் கந்தன். வீடு மனை யோகத்தை அளித்திடுவான். செவ்வாய் தோஷத்தை நீக்கிடுவான். திருமண பாக்கியத்தைக் கொடுத்திடுவான்.
கவலைகளையெல்லாம் போக்கும் கந்தகுருவை வேண்டுவோம். வேதனைகளையெல்லாம் போக்கியருளுவான் ஞானக்குமரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in