Last Updated : 04 Dec, 2020 04:21 PM

 

Published : 04 Dec 2020 04:21 PM
Last Updated : 04 Dec 2020 04:21 PM

வெற்றியைத் தரும் வெற்றிலை மாலை!  ஜெயம் தருவார் ஜெய் அனுமன்! 


ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், எல்லாக் காரியங்களிலும் வெற்றியைத் தந்தருள்வார் அனுமன்.

ஸ்ரீராமபிரானின் பக்தர்களில் முதன்மையான, முழுமையான பக்தர் என்று ஸ்ரீஆஞ்சநேயரைச் சொல்கிறது புராணம். ஆஞ்சநேயரும் இறைசக்தி ரூபம்தான். ஆனாலும் கைகூப்பிய நிலையில் ராம பக்த அனுமனாகவே காட்சி தருகிறார்.

அனுமன் ஜெய் அனுமன் என்று கொண்டாடப்படுகிறார். ஜெயிக்க வைக்கும் அனுமன் என்று போற்றப்படுகிறார். அனுமனுக்கு வெண்ணெய்க்காப்பு சார்த்தி வேண்டிக்கொண்டாலோ வெற்றிலை மாலை அணிவித்து பிரார்த்திக் கொண்டாலோ எடுத்த காரியம் அனைத்தையும் ஜெயமாக்கிக் கொடுப்பார் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்

அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு சீதாதேவியைக் கண்டார்.
ராமர் நலமாக உள்ள விபரங்களைச் சீதையிடம் அனுமன் தெரிவித்தார். பிறகு ராமர் தந்த மோதிரத்தை சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர். சீதா தேவியும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதாதேவி விரும்பினாள். ஆனால் அப்போது சீதைக்கு அட்சதை போன்ற பொருள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் அருகில் இருந்த வெற்றிலைக் கொடியிலிருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவினார் சீதாதேவி. ஆசீர்வதித்து அருளினாள். சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியை ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் ஏற்று மகிழ்ந்தார்.

இதையொட்டித்தான், அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிந்து வழக்கம் வந்ததாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாம் செய்கிற எந்த பூஜையாக இருந்தாலும் சரி, எந்த தெய்வ வழிபாடாக இருந்தாலும் வெற்றிலை பாக்கு, பூ பழங்கள் என்று வைப்பது வழக்கம்தான். என்றாலும் அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாகிறது. வெற்றிலையை மாலையாக்கி சார்த்துவது அனுமனுக்கு மட்டும்தான்.

அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும் போது வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அனுமனுக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டியதையெல்லாம் தந்தருள்வான் அனுமன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x