Last Updated : 23 Nov, 2020 02:51 PM

 

Published : 23 Nov 2020 02:51 PM
Last Updated : 23 Nov 2020 02:51 PM

பெருமாளை நினைத்து சங்கு தீர்த்தம்; செல்வம் சேரும்; காரியம் வெற்றியாகும்! 

பெருமாளை நினைத்து சங்கு தீர்த்தம் விட்டு உரிய ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால், இல்லத்தில் செல்வச் சேர்க்கை நிகழும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியைத் தந்தருளும் என்பது ஐதீகம்.

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பார்கள். அதேபோல், சங்கு நம் வீட்டில் இருந்தாலே சகல நன்மைகளும் நடக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சங்கின் தன்மை என்ன என்று தெரியாமலேயே, அறியாமலேயே வீட்டை அலங்கரிப்பதற்காக சங்கு வைத்திருப்பார்கள் சிலர். இன்னும் சிலர் சிறிய அளவிலான சங்கு கொண்ட கீசெயினை வைத்திருப்பார்கள். பூஜையறையில் வெள்ளை வெளேரென சங்கு வைத்திருப்பார்கள். அந்தச் சங்கைக் கொண்டு, பூஜையறையில் உள்ள சின்னச்சின்ன விக்கிரகங்களுக்கெல்லாம் அபிஷேகம் செய்வார்கள்.

சங்கு வைத்திருப்பதும் விசேஷம். சங்கு கொண்டு அபிஷேகிப்பதும் நன்மைகளை வாரி வழங்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

சங்கு என்பது வீரம் என்பதைக் குறிக்கும். சங்கு என்பது ஆரம்பத்தைக் குறிக்கும். சங்கு என்பது காரிய வெற்றியைக் குறிக்கும். சங்கு என்பது கலைகளைக் குறிக்கும். சங்கு என்பதைக் கல்வியைக் குறிக்கும். சங்கு என்பது அமைதியைக் குறிக்கும். சங்கு என்பதை பக்தியைக் குறிக்கும். சங்கு என்பது செல்வத்தைக் குறிக்கும்.

சங்கு என்பது மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் இருப்பது. சங்கு கொண்டு சங்கநாதம் எழுப்பினார். இதையே பாஞ்சஜன்யம் என விவரிக்கிறது மகாபாரதம். பகவான் கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து, குருக்ஷேத்திர யுத்தத்தை நிகழ்த்திய போது, பாஞ்சஜன்யம் எழுப்பி, அறிவித்தார்.

ஒரு கரத்தில் சங்கு, இன்னொரு கரத்தில் சக்கரம் என சங்கு சக்கரதாரியாக பெருமாள் காட்சி அளிக்கிறார். சங்கு வழிபாட்டில், சிவனாருக்கும் முக்கியத்துவம் உண்டு. பெருமாளுக்கு சங்கு அபிஷேகம் செய்வது சகல செல்வங்களைத் தரும்.

வீட்டில் விளக்கேற்றி, பெருமாள் திருவுருவப் படங்களுக்கோ சிலைக்கோ துளசி மாலை சார்த்துங்கள். கிழக்குப் பார்த்து அமர்ந்துகொண்டு, சங்கில் நீர் நிரப்பி, பெருமாள் சிலை இருந்தால் எதிரில் வைத்துக்கொண்டு, 108 முறை...

ஓம் சுதர்சனாய நமஹ, ஓ மஹா விஷ்ணவே நமஹ எனும் மந்திரத்தைச் சொல்லுங்கள். ஒவ்வொரு முறை சொல்லிவிட்டும் சங்கில் இருந்து பெருமாளுக்கு சங்கில் அபிஷேகம் செய்யுங்கள்.

ஒருவேளை, பெருமாள் சிலை இல்லாது போனாலும் கொஞ்சம் துளசி வைத்துக்கொண்டு, அந்த துளசியையே பெருமாளாக பாவித்து, சங்கால் அபிஷேகிக்கலாம்.
இதனால் இதுவரை இருந்த பொருளாதாரக் கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நடந்தேறும். சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x