Published : 23 Nov 2020 10:38 AM
Last Updated : 23 Nov 2020 10:38 AM
வாஸ்து நாளில், வாஸ்து நேரத்தில் விளக்கேற்றுங்கள். மனதார வழிபடுங்கள். வீட்டு திருஷ்டியெல்லாம் நீங்கச் செய்வார் வாஸ்து பகவான். இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திர நிலையைப் போக்கி அருளுவார். குடும்பத்தில் ஒற்றுமையைப் பலப்படுத்தித் தருவார். இன்று 23ம் தேதி திங்கட்கிழமை, வாஸ்துநாள்.
வீடு என்பது மிக விடுதலையான இடம். வீடு என்பது நமக்கே நமக்கான இடம். வீடு என்பது எத்தனை கஷ்டங்களானாலும் வருத்தங்கள் இருந்தாலும் நம்மை நிம்மதிப்படுத்துக்கிற, அமைதிப்படுத்துகிற இடம்.
அப்படிப்பட்ட வீடானது வெறும் கல்லோ மணலோ சிமெண்டோ அல்ல. நம் உணர்வு சம்பந்தப்பட்டது. நம் எண்ணங்களுடனும் செயல்களுடனும் தொடர்பு கொண்டது. நம்மை இந்த பூமித்தாயானவள் எப்படி தாங்கிக் கொள்கிறாளோ, அப்படித்தான் வீடு என்பதும் நம்மை ஒரு தாயைப் போல தாங்கிக் கொள்கிறது. அரவணைக்கிறது. ஆதுரமாய் சாந்தப்படுத்துகிறது.
அத்தகைய வீட்டில், தெய்வ கடாக்ஷம் நிறைந்திருக்க வேண்டும் என்பது ரொம்பவே முக்கியம். எதிர்மறைச் சொற்கள் தலைதூக்காமல் இருக்க வேண்டும் என்பதும் துர்குணங்களும் வார்த்தைகளும் நம்மிடம் இருந்து வராமல் இருக்க வேண்டும் என்பதும் மிக மிக அவசியம்.
இப்படி நல்ல குணங்களும் நற்சிந்தனைகளும் நல்ல நல்ல வார்த்தைகளும் இல்லத்தில் சூழ்ந்திருக்க, தெய்வ அருள் வியாபித்திருக்க... வாஸ்து என்பது மிகச்சரியாக இருக்க வேண்டும். வாஸ்து பகவான் இல்லத்தில் பரிபூரணமாக ஆட்சி செலுத்த வேண்டும்.
அப்படிப்பட்ட வாஸ்து பகவானுக்கு உரிய நாளில், இல்லத்தை தூய்மையாக வைத்திருப்பதும் தீப தூப ஆராதனைகள் செய்து வணங்குவதும் வளம் சேர்க்கும். பலம் தந்தருளும்.
இன்று 23ம் தேதி வாஸ்து பகவானுக்கு உரிய நாள். வாஸ்து நாள். காலை 11.29 முதல் 12.05 வரையிலான நேரத்தில், வீட்டில் விளக்கேற்றுங்கள்.
மாலையும் விளக்கேற்றுங்கள். மங்காத செல்வம் தந்திடுவார் வாஸ்து பகவான். வாஸ்து நேரத்தில் விளக்கேற்றுங்கள். மனதார வழிபடுங்கள். வீட்டு திருஷ்டியெல்லாம் நீங்கச் செய்வார் வாஸ்து பகவான். இல்லத்தில் இதுவரை இருந்த தரித்திர நிலையைப் போக்கி அருளுவார். குடும்பத்தில் ஒற்றுமையைப் பலப்படுத்தித் தருவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!