திருவொற்றியூர் கோயிலில் குருப்பெயர்ச்சி பூஜை; வீட்டில் இருந்தே குருவருளைப் பெற அற்புத தரிசனம்! 

திருவொற்றியூர் கோயிலில் குருப்பெயர்ச்சி பூஜை; வீட்டில் இருந்தே குருவருளைப் பெற அற்புத தரிசனம்! 
Updated on
1 min read

இன்று 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில், குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமங்கள், பரிகார பூஜைகள் விமரிசையாக நடைபெறுகிறது. குருவருளும் திருவருளும் தருகிற இந்த குருப்பெயர்ச்சி பூஜையை, வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் தரிசித்து பலன் பெறுங்கள்; பலம் பெறுங்கள்.

நவக்கிரகங்களில் மிகவும் சிறந்த யோக கிரகமாக கருதப்படுபவர் குரு பகவான். எந்தவிதமான தோஷம் இருந்தாலும் குருவின் பார்வை பட்டால் விலகிவிடும் என்பது ஐதீகம். குரு பகவான், தான் இருக்கும் ராசியை விட பார்வை படும் ராசிக்குத்தான் அதிக நன்மைகளை வழங்கி அருளுவார்.

குரு பகவான் நிகழும் சார்வரி ஆண்டு, ஐப்பசி மாதம் 30ம் நாள், நவம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் பிரவேசிக்கிறார்.
பெரும்பான்மையான ஆலயங்களில், குரு தட்சிணாமூர்த்தி, தென் முகமாகக் காட்சி தருவதுதான் வழக்கம். சென்னை திருவொற்றியூரில் தட்சிணாமூர்த்தி வடக்கு முகமாக வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும். அதனால் இந்த ஸ்தலம் வடகுருஸ்தலம் என அழைக்கப்படுகிறது. மேதா, வீணா, யோகா என பலவகையான தட்சிணாமூர்த்திகளில், இந்த ஆலயத்தில் யோகா தட்சிணாமூர்த்தியாக அருள்தருகிறார்.

வடசென்னை திருவொற்றியூரில் வடகுருஸ்தலம் என அழைக்கப்படும் அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயிலில் 15-11-2020 அன்று குருபெயர்ச்சி பூஜை நடைபெற உள்ளது. குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். 15-11-2020 ஞாயிற்று கிழமை அன்று இரவு 7.30 மணிமுதல் 10.00 மணிவரை கணபதி ஹோமம், பரிகார ஹோமம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியினை https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து அருள்மிகு தட்சிணாமூர்த்தி அருள் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும்.

இந்த அற்புதத் தரிசனத் தகவல்களை, தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் இந்த வழிபாட்டினை வீட்டில் இருந்தபடியே நேரலையில் தரிசியுங்கள். குருவருளும் இறையருளும் பெறுங்கள் என ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in