Last Updated : 12 Nov, 2020 12:49 PM

 

Published : 12 Nov 2020 12:49 PM
Last Updated : 12 Nov 2020 12:49 PM

குரு வார பிரதோஷம்; ஐப்பசியின் நிறைவு பிரதோஷம்!  சகல ஐஸ்வர்யமும் தரும் நந்தீஸ்வர வழிபாடு

ஐப்பசி மாத நிறைவு பிரதோஷம் இன்று. குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வருகிற பிரதோஷம் இது. இந்த நன்னாளில், மாலையில் சிவாலயங்களில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்யுங்கள். இன்று 12ம் தேதி பிரதோஷம்.

சிவ வழிபாடு என்பது நம் வாழ்வில் மிக மிக முக்கியமான வழிபாடு. ஒவ்வொரு ஏகாதசி திதியிலும் பெருமாள் வழிபாடு செய்வது மகத்தான பலன்களைத் தரும். அன்றைய நாளில் விரதம் மேற்கொண்டு பெருமாள் வழிபாடு செய்வார்கள் பக்தர்கள்.

அதேபோல், ஒவ்வொரு சஷ்டி திதியும் முருகப்பெருமானை வழிபட உகந்தவை. சஷ்டியில் விரதம் மேற்கொண்டு முருகக் கடவுளை வழிபடுகிற பக்தர்கள் உண்டு. அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொள்ளுகிற வழக்கம் உண்டு.

பஞ்சமி திதியில், சப்தமாதர்களில் ஒருவரான வாராஹியை வழிபடுவார்கள் பக்தர்கள். வாராஹி வழிபாடு, சக்தியைக் கொடுக்கும். எதிர்ப்பை அழிக்கும். இன்னல்களைப் போக்கும்.

இப்படித்தான் விநாயகரை வழிபட உரிய நாள் அமைந்துள்ளது. அம்பாளை வழிபடவும் அற்புதமான நாள் அமைந்திருக்கிறது. அதேபோல், அஷ்டமியில் பைரவர் வழிபாடு வழக்குகளில் இருந்தும் எதிர்ப்புகளில் இருந்தும் வெற்றியைத் தந்தருளும்.

இப்படித்தான் திரயோதசி திதியில், பிரதோஷ வழிபாடு என்பதும் சிவ வழிபாட்டின் மிக மிக முக்கியமான வழிபாடாக அமைந்திருக்கிறது.

பிரதோஷம் என்பது சிவனாரை வழிபடுவதற்கு உரிய நன்னாள். பிரதோஷம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம். பொதுவாகவே பிரதோஷ நாளில், பிரதோஷ நேரத்தில் சிவன் கோயிலுக்குச் சென்று நந்திதேவருக்கும் சிவனாருக்கும் அபிஷேகங்கள் நடைபெறுவதையும் விசேஷ பூஜையைத் தரிசிப்பது மகா புண்ணியம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம் என்பது போல், வியாழக்கிழமை வருகிற பிரதோஷமும் விசேஷம் வாய்ந்தது. வியாழக்கிழமையை குரு வாரம் என்று போற்றுகிறோம். குரு வார வியாழக்கிழமையில், சிவாலயம் சென்று நந்திஸ்வரரையும் சிவபெருமானையும் தரிசித்து பிரார்த்தனை செய்தால், மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும்.

ஐப்பசி மாத நிறைவு பிரதோஷம் இன்று (12ம் தேதி). குரு வாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வருகிற பிரதோஷம். இந்தப் பிரதோஷ நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். சகல செளபாக்கியங்களையும் ஐஸ்வரியத்தையும் தந்தருள்வார் ஈசன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x