

வாழ்வில் இருந்த தடைகளையெல்லாம் நீக்கித் தரும் விஜயலட்சுமி தேவியை வணங்குங்கள். காரியம் அனைத்தும் வீரியமாகும். எண்ணங்கள் அனைத்தும் செயல் வடிவம் பெறும். செயல்களில் உலுள்ள சிக்கல்கள் எல்லாமே காணாமல் போகும்.
செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் எந்த நாளும் சொல்லுங்கள். இந்த ஸ்தோத்திரம் வலிமை மிக்கது. வளமும் நலமும் தரக்கூடியது.
ஸ்ரீவிஜயலட்சுமி ஸ்தோத்திரம் :
அஷ்ட பாஹீயுதாம்தே வீம் ஸிம்ஹாசன
வரஸ்த்திதாம் சுகாஸநாம் சுகேசீம்ச கிரீட
மகுடோஜ்வலாம் ச்யாமாங்கீம் கோமளாகாரம்
சர்வாபரண பூஷிதாம் கட்கம் பாசம் ததா சக்ரம்
அபயம் சவ்ய ஹஸ்தகே கேடகஞ் சாங்குசம்
சங்கம் வரதம் வாமஹஸ்தகே ராஜரூபதராம்
சக்திம் ப்ரபா செளந்தர்ய சோபிதாம் ஹம்சாரூடாம்
ஸ்மரேத் தேவீம் விஜயாம் விஜயாப்தயே
மனித வாழ்வில் வெற்றிகளுக்கெல்லாம் உரிய காரணகர்த்தாவாகத் திகழ்பவள் விஜயலட்சுமி. வெற்றிக்குத் தேவதையாக இருப்பவள் ஸ்ரீவிஜயலட்சுமி. இவளது அருள் வை இருந்தால்தான் தொடர்ந்து வெற்றியை அடைய முடியும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லுங்கள். ஸ்ரீவிஜயலட்சுமி தேவியை வழிபடுங்கள்.
வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. இந்த தேவியை வழிபட்ட பின்னரே எந்த முயற்சியையும் தொடங்க வேண்டும். ஸ்ரீவிஜயலட்சுமியை வணங்காமல் தொடங்கப்படுகிற எந்த முயற்சியும் வெற்றியில்தான் முடியும். அவளை வணங்கினால், வெற்றி மேல் வெற்றி என்றுதான் வாழ்க்கையில் இருக்கும்.
வெற்றிக்கு தேவதையான விஜயலட்சுமியை மனதார வழிபடுங்கள். மங்காத செல்வங்களைத் தந்திடுவாள்.