அம்மனுக்குச் செய்யும் அபிஷேகங்கள் மற்றும் பலன்கள் என்ன?

அம்மனுக்குச் செய்யும் அபிஷேகங்கள் மற்றும் பலன்கள் என்ன?
Updated on
1 min read

அம்மனை வழிபடுவதால் வாழ்வில் எண்ண முடியாத வளர்ச்சியைக் காணலாம் என்பார்கள். இதனால் இல்லத்தில் பெண் குழந்தைகள் பிறக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை. வாழ்வில் அந்தந்த காலகட்டத்தில், ஒவ்வொரு வேண்டுதல்கள் இருக்கும்.

அவற்றை அம்மனுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்கின்றனர் பெரியோர். திரவியங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அத்திரவியத்தை அளித்து பக்தர்கள் வேண்டுவனவற்றைப் பெறலாம் என்பது ஐதீகம்.

தீர்க்காயுசுடன் வாழப் பசும்பால், குடும்ப ஒற்றுமைக்கு இளநீர், நல்வாழ்க்கைக்கு நல்லெண்ணை, கடன் தீர அரிசி மாவுப் பொடி, நினைத்த காரியம் நிறைவேற நீர், பிணிகள் தீரக் கரும்புச்சாறு, குழந்தை பாக்கியம் பெற பசுந்தயிர், பயம் போக்க எலுமிச்சைச் சாறு, இனிய குரல் வளம் கிடைக்க தேன், செல்வம் சேர பஞ்சாமிருதம், அஷ்ட ஐஸ்வர்யத்திற்கு சந்தனம், பாவங்கள் கரைய பஞ்சகவ்யம், முக்தி கிடைக்க நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தல் பன்மடங்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in