

தனம் தரும் தனலட்சுமியை வழிபடுவோம். தானிய லாபம் தந்து இல்லத்தில் சுபிட்சத்தை நிறைத்துக் கொடுக்கும் தான்ய லட்சுமியை வணங்குவோம். சகல சுபிட்சமும் ஐஸ்வர்யமும் பெறுவோம்.
அஷ்ட லட்சுமிகளாக இருந்து அகிலத்தையும் அகில மக்களையும் அருள் செய்து காக்கின்றனர் தேவியர். இல்லத்தில், தனலட்சுமியின் சிலையோ படமோ இருப்பது மகத்தான பலன்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
தனலட்சுமி ஸ்தோத்திரம்
கிரீட மகுடோ பேதாம்
ஸ்வர்ண வர்ண சமந்விதாம்
சர்வாபரண சம்யுக்தாம்
சுகாசந சமந்விதாம் பரிபூர்ணஞ்ச
கும்பஞ்ச தக்ஷிணேன கரேணது சக்ரம்
பாணஞ்ச தாம்பூலம் ததா வாம கரேணது சங்கம்
பத்வஞ்ச சாபஞ்ச கண்டி காமபி
தாரிணீம் சத்கஞ்சுக ஸ்தநீம்
த்யாயேத் தன லக்ஷ்மீம் மநோஹரம்.
இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபட்டால், நல்ல வழியாகிய தர்மநெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை சம்பாதித்து வாழச் செய்வாள். பொருள் வளத்துடன் வாழ ஸ்ரீதனலட்சுமி தேவி அருள்புரிவாள். இல்லத்தில் தரித்திரம் பறந்தடித்து ஓடிவிடும்.
அதேபோல், தான்யலட்சுமி ஸ்தோத்திரத்தையும் சொல்லுங்கள்.
ஸ்ரீ தான்யலட்சுமி ஸ்தோத்திரம்
வரதாபய சம்யுக்தாம் கிரீட மகுடோஜ்வலாம்
அம்புஜஞ் சேக்ஷீசாலிஞ்ச கதலீ பலத்ரோணிகாம்
பங்கஜம் தக்ஷவாமேது ததாநாம்
சுக்லரூபிணீம் க்ருபா மூர்த்திம் ஜடாஜீடாம்
சுகாசந சமந்விதாம் சர்வாலங்கார சம்யுக்தாம்
சர்வாபரண பூஷிதாம் மதமத்தாம்
மநோஹரி ரூபாம் தான்யட்ரீயம் பஜே
இந்த ஸ்லோகத்தை தினமும் கூறி ஸ்ரீதான்யலட்சுமியை வணங்கி வழிபடுங்கள். தோட்ட, வயல்களில் தான்யங்கள் செழித்து வளர்ந்து களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறைந்து விளங்கும். லாபம் கொழிக்கப் போவீர்கள். நம் வாழ்வில் உணவுப் பஞ்சமே இருக்காது. வீட்டில் அரிசி பருப்புக்குப் பஞ்சமிருக்காது. தானியத்தில் ஆரோக்கியமும் பலமும் கிடைக்கப் பெறுவீர்கள்.