Last Updated : 03 Nov, 2020 10:14 PM

 

Published : 03 Nov 2020 10:14 PM
Last Updated : 03 Nov 2020 10:14 PM

’பொறுமையுடன் காத்திருங்கள்’ என்கிறார் ஷீர்டி சாயிபாபா! 

காத்திருப்பவர்களுக்குத்தான் பலன் கிடைக்கும். காத்திருப்பவர்களின் பொறுமையைத்தான் நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான காரண காரியங்களுடன் நீங்கள் நினைத்தவை அனைத்தும் உங்களை வந்தடையும் என்கிறார் பகவான் சாயிபாபா.

பகவான் சாயிபாபாவை, கண்கண்ட தெய்வமாகப் போற்றி வணங்கி வருகின்றனர் பக்தர்கள். ஷீர்டியில் அவதரித்த அற்புதமான மகான் சாயிபாபா. தன் அருளாடல்களாலும் சேவையாலும் லட்சக்கணக்கான பக்தர்களை, தன் கண் முன்னே அருளி ஆசீர்வதித்தவர் பாபா என்று கொண்டாடுகிறார்கள்.

பாபாவும் தன்னை நம்பியவர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை. அதனால்தான் நம்பிக்கையுடன் பாபாவைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள். தங்களை சாயி குடும்பம் என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொள்கிறார்கள்.

ஷீர்டியில் அவதரித்த மகான் பகவான் சாயிபாபாவுக்கு, இந்தியாவெங்கும் பல ஊர்களில் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான தன்னுடைய பக்தர்களுக்கு அருளாடல்களை ஏதேனும் ஒருவிதத்தில், ஒவ்வொரு விதமாக நடத்திக் கொண்டிருக்கிறார் பாபா.

தன்னுடைய பக்தர்களுக்கு பாபா சொல்லும் மிக முக்கியமான அறிவுரை... பொறுமை. ‘பொறுமையுடன் காத்திருங்கள். பலன் பெறுவீர்கள்’ என்று அருளுகிறார் பாபா.
‘உங்களுக்கு எந்த விதமான சூழல்கள் ஏற்பட்டாலும் சரி, எவ்வளவு பெரிய இன்னல்கள் உங்களைத் தாக்கினாலும் சரி... கலங்கிவிடாதீர்கள். காத்திருங்கள். பள்ளம் என்றிருந்தால் மேடும் இருக்கத்தானே செய்யும். பள்ளத்தில் இருந்துவிட்டால் மேட்டுக்கு வரும் நேரமும் காலமும் நிச்சயம் உண்டு. அதுவரை பொறுமையாக இருங்கள். புலம்பாதீர்கள். உங்கள் புலம்பலால் இன்னும் குழம்பித்தான் போவீர்கள்.

காத்திருக்க வேண்டும். காத்திருப்பதற்கு பொறுமையைக் கையாளவேண்டும். எனவே, பொறுமையுடன் இருங்கள். உன் காத்திருப்பையும் பொறுமையையும் நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். சரியான நேரம் உங்களுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறது. அந்த நேரத்துக்கு நீங்கள் காத்துக்கொண்டே இருங்கள். பொறுமையுடன் காத்துக்கொண்டே இருங்கள்.

சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான காரண காரியங்களுடன் உங்களை வந்தடையும். நீங்கள் நினைத்தவை அனைத்தும் உங்களை வந்தடையும். காத்திருங்கள். நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள்’ என்கிறார் பாபா.

காத்திருங்கள். பொறுமையுடன் இருங்கள். பாபாவின் அருட்பார்வை உங்கள் மீதுதான் இருக்கிறது. உங்களுக்கு அருள, பாபாவும் காத்துக்கொண்டிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x