

நலம் அனைத்தும் தந்தருளும் நவராத்திரி நாட்களில் குடும்பமாக வீட்டுக்கு வருவோரை வரவேற்பதும் உபசரிப்பதும் ரொம்பவே முக்கியம். வீட்டுக்கு வருபவர்கள் குளிர்ந்து ஆசீர்வதிப்பார்கள். அவர்களின் ஆசியுடன் அம்பாளின் அனுக்கிரஹமும் கிரகத்தில் சேர, எல்லா வளமும் நலமும் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.
ஒன்பது நாள்களும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டிய பழங்கள்:
• முதல் நாள் – வாழைப்பழம்
• இரண்டாம் நாள் – மாம்பழம்
• மூன்றாம் நாள் – பலாப்பழம் (பலாச்சுளை)
• நான்காம் நாள் – கொய்யாப்பழம்
• ஐந்தாம் நாள் – மாதுளை
• ஆறாம் நாள் – ஆரஞ்சு
• ஏழாம் நாள் – பேரிச்சம்பழம்
• எட்டாம் நாள் – திராட்சை
• ஒன்பதாம் நாள் – நாவல் பழம்
ஒன்பது நாள்களும் அம்பாளுக்கு வழங்கவேண்டிய பிரசாதங்கள்:
• முதல் நாள் – சுண்டல், வெண்பொங்கல்
• இரண்டாம் நாள் – புளியோதரை
• மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல்
• நான்காம் நாள் – கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)
• ஐந்தாம் நாள் – தயிர்சாதம், வெண்பொங்கல்
• ஆறாம் நாள் – தேங்காய் சாதம்
• ஏழாம் நாள் – எலுமிச்சை சாதம்
• எட்டாம் நாள் – பாயஸ அன்னம் ( பால் சாதம்)
• ஒன்பதாம் நாள் – அக்கார அடிசில், பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல்.
நவராத்திரி நன்னாளில், கொலு பார்க்க வருபவர்களுக்கு, அந்தந்த நாளுக்கு உரிய பழங்களையும் நைவேத்தியப் பிரசாதங்களையும் வழங்குங்கள். அம்பாளின் அருளைப் பரிபூரணமாகப் பெறுவீர்கள். இல்லத்திலும் உள்ளத்திலும் லக்ஷ்மி கடாட்சம் குடிகொள்ளும். நிம்மதியும் நிறைவுமான வாழ்வைப் பெறுவீர்கள்.