

துலாம்
உங்கள் ராசிக்கு 9-ல் குரு அமர்ந்து ஜன்ம ராசியையும், 3, 5-ம் இடங்களையும் பார்ப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முயற்சி கைகூடும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அளவோடு அனுகூலம் உண்டாகும். தனவந்தர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். தெய்வ காரியங்களிலும் தர்ம காரியங்களிலும் ஈடுபாடு உண்டாகும். சாதுக்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் ஆகியோரது தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.
திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். பணப்புழக்கம் சீராக இருந்துவரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் கணவன்-மனைவி உறவு நிலை பாதிக்கும். விட்டுக் கொடுப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. வாரப் பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்பு வரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30 (பிற்பகல்), ஜூன் 1, 2, 4 | திசை: வடகிழக்கு.
நிறங்கள்: மஞ்சள், பொன் நிறம் | எண்: 3.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடவும். சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கவும்.
விருச்சிகம்
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ம் இடத்தில் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். செந்நிறப்பொருட்கள் லாபம் கொண்டு வரும். 6-ல் சுக்கிரனும் 7-ல் சூரியனும் வக்கிர புதனும் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரால் சங்கடம் உண்டாகும்.
கூட்டாளிகள் ஒத்துழைக்க மாட்டார்கள். குரு 8-ல் இருப்பதால் மக்கள் நலனில் அக்கறை தேவை. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் எச்சரிக்கை தேவை. 12-ல் ராகு இருப்பதால் பயணத்தின்போது விழிப்புத் தேவை. வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலை தூரத்தொடர்பு பயன்படும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 2, 4 | திசைகள்: வடமேற்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்மை, மெரூன், சிவப்பு | எண்கள்: 7, 9.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியையும் துர்க்கையையும் வழி படவும். ஏழைப் பெண்களுக்கும் வேதவிற்பன்னர்களுக்கும் உதவி செய்யவும்.
தனுசு
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் புதனும் 7-ல் குருவும் 10-ல் செவ்வாயும், 11-ல் சனி, ராகுவும் உலவுவதால் எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பிறக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். மன உற்சாகம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். அரசுப்பணியாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை நிலவி வரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30, ஜூன் 1 (பகல்), 4 (பிற்பகல்).
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு, வடகிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறம் | எண்கள்: 7-ஐத் தவிர இதர எண்கள்.
பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்யவும். கணபதி மூல மந்திரத்தைக் குருமுகமாக உபதேசம் பெற்றுச் சொல்லவும்.
மகரம்
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவதால் சுகம் கூடும். நல்லவர்களின் தொடர்பால் நலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களிலும், விருந்து, உபசாரங்களிலும் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாத தால் மக்களால் பிரச்னைகள் சூழும்.
ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் முன்னேற்றம் தடைபடும். ஆன்மிகவாதிகள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. பெற்றோர் நலனிலும் கவனம் செலுத்த வேண்டிவரும். மாணவர்கள் படிப்பில் அதிகம் அக்கறை செலுத்துவது அவசியமாகும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதி: மே 30, ஜூன் 1, 2 | திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, கறுப்பு | எண்கள்: 4, 6.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நலம் சேர்க்கும்.
கும்பம்
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும், கேதுவும், 5-ல் குருவும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாகும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு கூடும். தியானம், யோகா ஆகியவற்றில் நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும்.
மருத்துவர்கள் நற்பெயருக்கு உரியவர்கள் ஆவார்கள். மகப்பேறு பாக்கியம் கிட்டும். மக்க ளால் அனுகூலம் ஏற்படும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். 4-ல் சூரியனும் வக்கிர புதனும் 8-ல் செவ்வாயும் உலவுவதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30, ஜூன் 1, 2, 4 | திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், பொன் நிறம், இளநீலம், வெண்மை | எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: சுப்பிரமணிய புஜங்கம் படிப்பதும் கேட்பதும் நல்லது. முருகனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். இளைஞர்களுக்கு உதவவும்.
மீனம்
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் சூரியனும் உலவு வதால் பொருள் வரவு சற்று அதிகரிக்கும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கூடும். எதிர்ப்புக்கள் குறையும். மேலதிகாரிகளின் பாராட்டு களைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். நல்லவர்களின் தொடர்பு கிட்டும். செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். மக்களால் ஓரளவு நலம் உண்டாகும்.
பெண்களால் அனுகூலம் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். வாரப் பின்பகுதியில் ஓர் அதிர்ஷ்ட வாய்ப்புக் கூடிவரும். 2-ல் கேதுவும், 7-ல் செவ்வாயும், 8 -ல் வக்கிர சனியும் ராகுவும் உலவுவதால் குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பேச்சி லும் செயலிலும் நிதானம் தேவை. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 30, ஜூன் 1, 2, 4 | திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, ஆரஞ்சு | எண்கள்: 1, 6.
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். ஏழை களுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்யவும்.