Last Updated : 05 Oct, 2020 09:56 PM

 

Published : 05 Oct 2020 09:56 PM
Last Updated : 05 Oct 2020 09:56 PM

செவ்வாய் பகவானுக்கு துவரம் பருப்பு... நெய் தீபம்!  சிக்கல்கள் தீரும்; கடனில் இருந்து மீள்வீர்கள்! 

செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே செவ்வரளி முதலான செந்நிற மலர்களைச் சூட்டுங்கள். அதேபோல் செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம்... துவரம் பருப்பு.கொஞ்சம் துவரம்பருப்பு சமர்ப்பித்து நெய் தீபமேற்றி வழிபடுங்கள்.

நவக்கிரகங்களில் முக்கியமான தெய்வம் செவ்வாய் பகவான். வாழ்க்கையில் ஒருகட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு செவ்வாய் கிரகத்தின் அனுக்கிரகம் அவசியம் தேவை. சிறு வயதில், கல்வி இருந்தால்தான் அடுத்தகட்டத்துக்கு வளரமுடியும். அதனால்தான் புத்தியில் பலத்தைத் தருகிறார் செவ்வாய் பகவான். படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் போது, உடலில் பலம் வேண்டும். அந்த பலத்தையும் வழங்குகிறார் செவ்வாய் பகவான்.

அதுமட்டுமா? படிப்பு, வேலைக்குப் பின்னர் திருமணம் எனும் சந்ததி வளர்க்கும் விஷயம். சந்ததியை வளர்க்க, திருமணம் அவசியம். வாழ்க்கைத் துணை அவசியம். செவ்வாய் தோஷம் முதலான கிரக பலவீனம் இருந்தால், திருமணம் நடப்பது தடைப்படும். அதனால்தான் செவ்வாய் தோஷம் குறித்து விளக்குகிறது ஜோதிட சாஸ்திரம்.

எல்லா சிவாலயங்களிலும் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது. நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு செவ்வாய்க்கிழமை காலையில் 9 மணியில் இருந்து 10 மணிக்குள் வணங்குவது மகத்துவம் வாய்ந்தது. அதேபோல், செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. எனவே செவ்வரளி முதலான செந்நிற மலர்களைச் சூட்டுங்கள். அதேபோல் செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம்... துவரம் பருப்பு.கொஞ்சம் துவரம்பருப்பு சமர்ப்பித்து நெய் தீபமேற்றி வழிபடுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு கால வேளையிலும் அதாவது மாலை 3 முதல் 4.30 வரையுள்ள நேரத்திலும் வழிபடலாம்.

செவ்வாய்க்கிழமைகளில், செவ்வாய் பகவானுக்கு உரிய காயத்ரியைச் சொல்லி, தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வணங்கி வழிபட்டு வாருங்கள். அதேபோல், இயலாதவர்களுக்கு துவரம் பருப்பு தானம் கொடுப்பதும் தோஷங்களைப் போக்கவல்லது.

செவ்வாய் முதலான தோஷ நிவர்த்தி பெறுவதற்கும் வழக்கில் வெற்றி பெறுவதற்கும் காரியத் தடைகள் நீங்குவதற்கும் கல்யாணம் வரன் அமைவதற்கும் செவ்வாய் பகவானை வணங்குங்கள்.

முருகப்பெருமானையும் செவ்வாய் பகவானையும் வைத்தீஸ்வரன் கோவிலில் சந்நிதி கொண்டுள்ள அங்காரகனையும் வழிபடுங்கள். இல்லத்தில் நெய் தீபமேற்றி, துவரம்பருப்பால் உணவு சமைத்து நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தாலும் எல்லா சிக்கல்களில் இருந்தும் விடுபடுவீர்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x