

சர்வ சமய சமுதாய நல்லிணக்க புனித பாத யாத்திரை 29.09.15 அன்று, நுங்கம்பாக்கத்தில் நீதியரசர் பி.ஆர். கோகுலகிருஷ்ணன் தலைமையில் தொடங்குகிறது.
இந்த யாத்திரை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் மற்றும் அன்னபூரணி ஆகிய தெய்வச் சிலாரூபங்கள் கோயில் கொண்டுள்ள ஸ்ரீஅமிர்தபுரி என்ற ராமானுஜ யோகவனத்தைச் சென்றடையும்.
கலைமாமணி டி.கே.எஸ். கலைவாணனின் கடவுள் வாழ்த்துடன் தொடங்கும் இப்புனித யாத்திரை, கல்பதேகி மகாதேவ மலை ஸ்ரீசதாசிவ ஞானாநந்த ஸ்வரூப ஸ்ரீமகாநந்த சித்தர் சுவாமிகள் வாழ்த்துடன் நடையைத் தொடங்குகிறது. இணை ஆணையர் சண்முக வடிவு கலந்து கொள்கிறார்.
இந்த புனித யாத்திரை வையாவூர் கிராமத்தில் உள்ள அமிர்தபுரி ராமானுஜ யோகவனத்தை 03.10.15 அன்று அடைந்து நிறைவுபெறுகிறது. தொடக்க மற்றும் நிறைவு விழாவில் ஸ்ரீகோவிந்த உபாசகர் சீதாராமசுவாமிகள் சிறப்பு உரையாற்றுவார்.