Last Updated : 04 Oct, 2020 08:15 PM

 

Published : 04 Oct 2020 08:15 PM
Last Updated : 04 Oct 2020 08:15 PM

சோம வாரம்... கார்த்திகை விரதம்... நவக்கிரக வழிபாடு! 

புரட்டாசி சோமவாரத்தில் சிவ வழிபாடு செய்வது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. அதேபோல் சோம வாரத்தில் கார்த்திகை விரதம் வருவது இன்னும் மகத்துவம் வாய்ந்தது. இந்தநாளில் சிவனாரை வணங்கி, முருகக் கடவுளை வணங்கி, நவக்கிரகத்தை வலம் வருவது தோஷங்கள் அனைத்தையும் நீக்கும். சந்தோஷத்தைப் பெருக்கும்.

சோமவாரம் என்பது திங்கட்கிழமையைக் குறிக்கும். திங்கள் என்றால் சந்திரன். சோமன் என்றால் சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்று. சந்திரனைப் பிறையென சிரசில் சூடிக்கொண்டிருப்பவர் என்பதால் ஈசனுக்கு சோமன் எனும் திருநாமம் அமைந்தது. அதேபோல் சந்திரசேகரன் என்கிற திருநாமமும் உண்டு.

சந்திர பகவான், நவக்கிரகங்களில் ஒரு கிரகம். 27 நட்சத்திரங்களை மனைவியராகக் கொண்டவர் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த திங்கட்கிழமையில் சந்திர பலம் பெறுவதற்கு, சிவ வழிபாடு செய்யவேண்டிய அற்புதமான நாள்.

மேலும் சந்திர பகவான், மனோகாரகன். நம் மனதை செம்மையாக்குபவன். சீர்படுத்துபவன். குழப்பங்களையெல்லாம் அகற்றி மனதை தெளிவுபடுத்தச் செய்வார். சந்திர பகவானை வணங்குவது வாழ்வில் தெளிவையும் மனோபலத்தையும் தந்தருள்வார்.

புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில், பெருமாளை வழிபடுவதும் விரதம் மேற்கொள்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளக்கூடியது.
அதேபோல் சோம வாரம் என்பதும் புரட்டாசி சோம வாரம் என்பதும் சிவ வழிபாட்டுக்கு உகந்த அருமையான நாள்.

நாளைய தினம் சோமவாரம். திங்கட்கிழமை. சிவனாருக்கு உகந்தநாள். இந்த நன்னாளில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று சிவபெருமானை வழிபடுங்கள். முருகப் பெருமானின் சந்நிதியில், மனதார வேண்டிக்கொள்ளுங்கள். சிவாலயத்தில் உள்ள நவக்கிரக சந்நிதிக்குச் சென்று, நவக்கிரகத்தை ஒன்பது முறை சுற்றி வலம் வந்து வேண்டிக்கொள்ளுங்கள்.

கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். மனோபலம் பெருகும். மனதில் தெளிவு பிறக்கும். சிவனாரையும் சிவ மைந்தன் முருகக் கடவுளையும் சந்திர பகவானையும் ஆத்மார்த்தமாக முழு ஈடுபாட்டுடன் வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டுவதெல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x