

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே உள்ள செளந்தர்யபுரம் என்ற கிராமத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீஅம்புஜவல்லி நாயிகா சமேத ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் வரமளிக்கும் சுந்தரவரத ஆஞ்சநேயரின் சிலாரூபம், இன்று, (செப். 3) நிர்மாணிக்கப் படவுள்ளது.
இத்திருக்கோயிலில், தும்பிக்கையாழ்வார், அம்புஜவல்லித் தாயார், ஆதிகேசவ பெருமாள், உற்சவத் தாயார் ராஜ்யலஷ்மி, ஆண்டாள், ஸ்ரீகருடாழ்வார், கிழக்கு நோக்கிய ராகு, கேது சர்ப்ப சிலாரூபங்கள், ஸ்ரீஆஞ்சநேயர், ஆழ்வார் ஆச்சார்யர்கள், ஸ்ரீபாஷ்யக்காரர், வேதாந்த தேசிகன், ஸ்ரீஆதிவண் சடகோபன் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
இங்கு சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீபத்ம சக்கரத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களை அருளும் அஷ்ட லஷ்மிகளும் ஸ்ரீஅம்புஜவல்லி தாயாருடன் இணைந்து நவ சக்தியாக அருள்பாலிக்கின்றனர். இந்த ஸ்ரீபத்ம சக்கரம் மகாலஷ்மி அம்சமாக இருப்பதாக ஐதீகம். எனவே இச்சக்கரத்தை வணங்கினால், இச்சக்கரத்தில் எட்டு இதழ்களாக உள்ள அஷ்ட லஷ்மிகள் வீற்றிருப்பதால், ஷேம, தைர்ய, வீர்ய, விஜய, ஆயுள், ஆரோக்கியங்கள் உட்பட அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளுவாள் என்பது நம்பிக்கை.
இத்திருக்கோயிலில் பெளர்ணமிதோறும் அஷ்டலஷ்மி மகாயக்ஞம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.