வல்லப மகாகணபதி

வல்லப மகாகணபதி
Updated on
1 min read

விநாயகப் பெருமான் வல்லபை என்ற சக்தியோடு, அமர்ந்த திருக்கோலத்தில், ஸ்ரீ வல்லப மகாகணபதியாகக் காட்சி அளிக்கும் இடம் சென்னை மேற்கு மாம்பலம். ஸ்ரீ வல்லப மகாகணபதி ஆலயம் என்று அழைக்கப்படும் இத்திருக்கோயிலில் சிவசக்தி ரூபமாக அரச மரமும், வேப்ப மரமும் இணைந்து காணப்படுகிறது.

இந்து அறநிலையத் துறைக்குட்பட்ட இத்திருக்கோயிலில் வள்ளி, தெய்வயானையுடன் சுப்பிரமணிய சுவாமியும், நவகிரகங்களும் அருள்பாலிக்கின்றனர். எண்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் காஞ்சி ஸ்ரீசந்திர சேகர மகாசுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.

திருமணத் தடை நீங்கும், குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கலந்து கொள்கின்றனர்.

குறிப்பாக விநாயக சதுர்த்தியன்று காலை 5.30 மணி முதல் 6.30 மணிவரை செண்டை மேளம், மாலை 7 மணி முதல் 8 மணி வரை பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இத்திருக்கோவிலில் அழகான தோற்றத்துடன் தம்பதியாய் காட்சி அளிக்கிறார் ஸ்ரீவல்லப மகாகணபதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in