

ராகுகாலத்தில் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். ஆலயத்துக்குச் சென்று எலுமிச்சை தீபம் ஏற்றும் அதேவேளையில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். திருஷ்டியெல்லாம் விலகும். கஷ்டங்கள் அனைத்தும் விலகும். ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள். ஆலயத்தில் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். வீட்டில் வழக்கம் போல் விளக்கேற்றுங்கள். எல்லா வளமும் தந்தருள்வாள் தேவி. இன்னல்களையெல்லாம் போக்கி, மகிழ்ச்சியைத் தந்திடுவாள் தேவி.
செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு உகந்த நாட்கள். அம்பிகைக்கு உரிய நாட்கள். சக்திக்கு உகந்த சக்தியை வழிபடுவதற்கு உரிய அருமையா நாட்கள். இந்தநாட்களில், ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் அம்பாளை வழிபடலாம். சிவாலயங்களில் உள்ள அம்பாள் வழிபாடு எந்தளவுக்கு நன்மைகளை வாரிக்கொடுக்குமோ... அதேபோல் பெருமாள் கோயிலில் உள்ள தாயாரையும் வழிபடலாம்.
அதேபோல் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில், மகாலக்ஷ்மியை வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பார்கள்.
முக்கியமாக, ராகுகாலத்தில் தேவி வழிபாடு செய்வது தீயசக்திகளை விரட்டும். எதிர்ப்புகளை விலக்கும். செவ்வாய்க்கிழமை ராகுகாலம் என்பது மாலை 3 முதல் 4.30 வரை. வெள்ளிக்கிழமை ராகுகாலம் காலை 10.30 முதல் 12 மணி வரை. ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரங்களில், சிவாலயத்தில் உள்ள துர்கையின் சந்நிதிக்கு, எலுமிச்சை தீபமேற்றி வழிபடலாம்.
துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால், வீட்டில் இதுவரை இருந்த காரியத்தடைகளெல்லாம் நீங்கும். வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தருவாள் துர்காதேவி.
ராகுகாலத்தில் விளக்கேற்றுங்கள். ஆலயத்தில் துர்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபடுங்கள். வீட்டில் வழக்கம் போல் விளக்கேற்றுங்கள். எல்லா வளமும் தந்தருள்வாள் தேவி. இன்னல்களையெல்லாம் போக்கி, மகிழ்ச்சியைத் தந்திடுவாள் தேவி.