Published : 10 Sep 2020 14:18 pm

Updated : 10 Sep 2020 15:59 pm

 

Published : 10 Sep 2020 02:18 PM
Last Updated : 10 Sep 2020 03:59 PM

மத்யாஷ்டமியில், பைரவாஷ்டகம்! எதிர்ப்புகள் அகலும்; காரியம் வெற்றியாகும்

kaalabairavar

மத்யாஷ்டமி எனும் அற்புதமான நாளில், பைரவரைப் பிரார்த்தனை செய்து, பைரவாஷ்டகம் பாராயணம் செய்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இதுவரை இருந்த எதிர்ப்புகள் அனைத்தும் அகலும். எடுத்த காரியங்களையெல்லாம் வெற்றியாக்கித் தந்தருள்வார் பைரவர்.

பைரவ வழிபாடு சக்தி வாய்ந்தது. காலபைரவரை அனுதினமும் வழிபடலாம். எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம். வழக்கு முதலான சிக்கல்கள், எதிரிகள் முதலான தொல்லைகள், குடும்பத்தில் குழப்பங்கள், கடன் தொல்லையால் அவமானம் என கலங்கித் தவிப்பவர்கள், அவசியம் பைரவரை வணங்கி வருவது நல்லது. அனைத்தையும் சுபமாக்கித் தருவார் காலபைரவர்.


குறிப்பாக தேய்பிறை அஷ்டமியில், பைரவ வழிபாடு என்பது மிக மிக அவசியம். பைரவருக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி முதலான செந்நிற மலர்களைச் சூட்டுங்கள். எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்டவர் அனுமன். மனோதிடம் தருபவர் அனுமன். அவருக்கு வடைமாலை சார்த்துவது விசேஷம். அதேபோல் பைரவருக்கும் வடைமாலை சார்த்தி வேண்டிக்கொள்வது மகோன்னத பலன்களைத் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்று 10ம் தேதி தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில், மாலையில் விளக்கேற்றி, பைரவாஷ்டகம் சொல்லி வழிபடுங்கள்.


பைரவாஷ்டகம்

தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே॥


பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்
கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்
ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்
பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்
நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥

தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்
ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க
நிர்மலம்

காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்
நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்
த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்
அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்
காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்
நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥


கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்
ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப
நாஸனம்
தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்
த்ருவம்॥

இந்த நன்னாளில், பைரவாஷ்டகம் சொல்லி பைரவ வழிபாடு செய்யுங்கள்.முக்கியமாக, தெருநாய்களுக்கு இரண்டு ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டாவது வழங்குங்கள். எதிரிகள் தொல்லைகள் ஒழியும். எதிர்ப்புகள் அகலும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்வில் காரியத்தில் வெற்றியைக் காண்பீர்கள்.


தவறவிடாதீர்!

மத்யாஷ்டமியில்பைரவாஷ்டகம்! எதிர்ப்புகள் அகலும்; காரியம் வெற்றியாகும்மத்யாஷ்டமிதேய்பிறை அஷ்டமிஅஷ்டமிபைரவர்பைரவாஷ்டமிமத்யாஷ்டமி பைரவாஷ்டகம்BairavarMathyashtamiKaalabairavar

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x