காரைக்கால் அம்மையார் அவதாரத் திருநாள் வழிபாடு

அம்மையாருக்கு மகா தீபாராதனைக் காட்டப்படுகிறது
அம்மையாருக்கு மகா தீபாராதனைக் காட்டப்படுகிறது
Updated on
1 min read

காரைக்கால் அம்மையார் அவதாரத் திருநாளையொட்டி, அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை இன்று நடைபெற்றது.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்டவருமான காரைக்கால் அம்மையார் அவதரித்த ஆவணி மாதம், கார்த்திகை நட்சத்திர நாளன்று அம்மையார் அவதாரத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் இன்று காரைக்காலில் உள்ள அம்மையார் கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள அம்மையாருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.

காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, கைலாசநாத சுவாமி, நித்யகல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரிய நிர்வாகிகள், உபயதாரர்கள் பங்கேற்றனர். கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இல்லை. பக்தர்கள் கண்டு தரிசிக்கும் வகையில் இணைய வழியில் நேரலையாக அபிஷேக, ஆராதனை நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்டன.

வழக்கமாக இந்நாளில் அம்மையார் மணி மண்டபத்தில் பக்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in