Last Updated : 04 Sep, 2020 12:14 PM

 

Published : 04 Sep 2020 12:14 PM
Last Updated : 04 Sep 2020 12:14 PM

பணக்கஷ்டமும் மனக்கஷ்டமும் போக்கும் தீப லக்ஷ்மி வழிபாடு! 

வழிபாடுகள் நம் வாழ்வில் மிக மிக முக்கியமானவை. நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்தவை. உலகாயத இந்த வாழ்க்கையில், நம் ஒவ்வொருக்குள்ளும் எத்தனையோ பிணக்குகள். ஏற்றத்தாழ்வுகள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஓராயிரம் சந்தோஷங்கள். ஈராயிரம் கவலைகள். சொல்லிவிட்டு அழுகிற துக்கங்களும், சொல்ல முடியாத அவமானங்களும் சுமந்துகொண்டுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இந்த காயத்தில் இருந்தும் ரணத்தில் இருந்தும் குணமாக நமக்கு ஒரு மருந்து கிடைக்காதா என்பதுதான் எல்லோரது ஏக்கமும். ஒரு விடிவுகாலம் பிறக்காதா என்பதுதான் எல்லோரது பிரார்த்தனையும். இருண்டு கிடக்கிற வாழ்வில், ஒரு ஒளி வந்து நம்மை வழிநடத்தாதா என்பதுதான் நம் எண்ணனும் ஏக்கதும் ஆசையும் விருப்பமும்!

இவற்றையெல்லாம் நீக்கி அருளக்கூடியதுதான் தீப வழிபாடு. எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் என்ன முறையில் நாம் பூஜிப்பதாக இருந்தாலும் முதலில் நாம் செய்வது தீபமேற்றுவதுதான். தீபமேற்றி வழிபடாத எந்தவொரு வழிபாடும் தொடக்கமாவதுமில்லை, பூர்த்தியாவதுமில்லை என்கிறது சாஸ்திரம்.

தீபம் என்பது இருளைப் போக்குவது. தீபம் என்பது சுடர் விடுவது. தீபம் என்பது ஒளியைத் தருவது. தீபம் என்பது வெளிச்சத்தைக் கொடுப்பது. தீபம் என்பது ஏற்றிய இடத்தை பிரகாசமாக்குவது. இருள் என்பது துக்கத்தின் சாயல் என்றால், தீபம் என்பது விடியலின் குறியீடு. இருள் என்பது வேதனை என்றால் தீபம் என்பது வேதனைக்கான மருந்து. எல்லாவற்றுக்குமாக, தீபம் என்பது வெறும் விளக்கு மட்டும் அல்ல. தீபம் என்பது லக்ஷ்மி அம்சம்.

‘வீட்டுக்கு விளக்கேத்த ஒரு மகாக்ஷ்மி வந்துட்டா’ என்கிறோம். ஒரு வீட்டின் பெண், மகாலக்ஷ்மிக்கு நிகரானவள். ஒருவீட்டுக்கு வருகிற மருமகள் மகாலக்ஷ்மிக்கு இணையானவள். ஒரு வீட்டின் விளக்கு என்பது மகாலக்ஷ்மி அம்சம். எங்கெல்லாம் விளக்கு ஏற்றப்படுகிறதோ... அந்த விளக்கில் வாசம் செய்கிறாள் மகாலக்ஷ்மி.
அவ்வளவு ஏன்... விளக்கையே லக்ஷ்மி என்கிறோம். தீபலக்ஷ்மி என்று போற்றுகிறோம். செவ்வாய், வெள்ளி என்றில்லாமல் எல்லா நாளும் விளக்கேற்றி, தீபலக்ஷ்மியை முதலில் அழைத்து ஆராதித்தாலே போதும்... நம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளியேற்றித் தந்தருள்வாள் லக்ஷ்மி.

வீட்டில் விளக்கேற்றிவிட்டு, இந்த ஸ்லோகத்தை ஆத்மார்த்தமாகச் சொல்லுங்கள்.

அந்தர் க்ருஹே ஹேமஸு வேதிகாயாம் ஸம்மார்ஜநாலே பநகர்ம க்ருதவா
விதாநதூ பாதுல பஞ்சவர்ணம் சூர்ணப்ரயுக்தாத் புதரங்கவல்யாம்
அகாதஸம்பூரண ஸரஸ்ஸமாநே கோஸர்பிஷாபூரித மத்யதேஸே
ம்ருணாலதந்து க்ருதவர்த்தி யுக்தே புஷ்பாவதம்ஸே திலகாபிராமே

பரிஷ்க்ருத ஸ்தாபித்ரத் நதீபே ஜ்யோதிர்மயீம் ப்ரஜ்ஜ வலயாமி தேவீம்
நமாம்யஹம் மத்குலவ்ருத்தி தாத்ரீம செளதாதி ஸர்வாங்கணஸோல மாநாம்
போ தீபலக்ஷ்மி ப்ரதிம் யஸோ மே ப்ரதேஹி மாங்கல்ய மமோகஸீலே
பர்த்ருப்ரியாம் தர்மவிஸிஷ்டஸீலாம் குருஷ்வ கல்யாண்யநுகம்பயா மாம்

யாந்தர்பஹிஸ்சாபி தமோபஹந்த்ரீ ஸந்த்யாமுகாராதிதபாதபத்மா
த்ரயீஸ முத்கோஷிதவைபவா ஸா ஹ்யநந்யகாமே ஹ்ருதய விபாது
போ தீப ப்ரஹ்ம ரூபஸ்த்வம் ஜ்யோதிஷாம் ப்ரபுரவ்யப;
ஆரோக்யம் தேஹி புத்ராம்ஸ்ச அவைதவ்யம் ப்ரய்ச்சமே

ஸந்த்யாதீப ஸ்தவமிதம் நித்யம் நாரீ படேத்து யா
ஸர்வ ஸெளபாக்யயுக்தா ஸ்யால்லக்ஷ்ம்யநுக்ர ஹதஸ்ஸதா
ஸரீரா ரோக்ய மைஸ்வர்யமரி பக்ஷக்ஷ யஸ்ஸுகம்
தேவி த்வத்ருஷ்டித்ருஷ்டாநாம் புருஷாணாம் ந துர்லபம்


இதி தீபலக்ஷ்மி ஸ்தவம் ஸம்பூர்ணம்


இந்த ஸ்லோகப் பாடலைச் சொல்லி, தீபத்தை வழிபடுங்கள். தீபத்துக்கு குங்கும அர்ச்சனை செய்யுங்கள். செந்நிற மலர்களால் தீபம் ஏற்றப்பட்ட விளக்கை அலங்கரியுங்கள். மனமொன்றி இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்.சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் முதலான இனிப்பை நைவேத்தியம் செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கையை ஒளிவீசச் செய்வாள் லக்ஷ்மி. உங்கள் எதிர்காலத்தை விடியலாக்கிக் கொடுப்பாள் தேவி. இதுவரை இருந்த பணக்கஷ்டங்களையும் மனக்கஷ்டங்களையும் போக்கி, சகல செல்வங்களையும் இல்லத்தில் நிறைக்கச் செய்து, மனதைப் பூரிக்கச் செய்வாள்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x