Last Updated : 02 Sep, 2020 07:42 PM

 

Published : 02 Sep 2020 07:42 PM
Last Updated : 02 Sep 2020 07:42 PM

மகாளய பட்சத்தில்... மூன்று விதமாக முன்னோர் வழிபாடு! 

மகாளய பட்ச காலத்தில் மூன்று வகையான தர்ப்பணம் செய்யலாம். அவரவர் வசதிக்குத் தக்கபடி இந்தத் தர்ப்பணங்களை சாஸ்திரங்கள் வரையறுத்து வைத்திருக்கின்றன என்கிறார்கள் ஆச்சார்யர்கள். பார்வணம், ஹிரண்யம், தர்ப்பணம் என்று மூன்று விதமான தர்ப்பணங்கள் இருக்கின்றன.

அதாவது, ஆறு ஆச்சார்யர்யர்களை, பித்ருக்களாக பாவித்து தந்தை, தாய், தாத்தா, பாட்டி முதலானவர்களைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்காக ஹோமம் செய்து, ஆச்சார்யர்களுக்கு உணவளித்து, தட்சணை வழங்கி, நமஸ்கரித்துச் செய்வது.

ஹிரண்யம் என்பது பொதுவாகவே அனைவரும் செய்யும் தர்ப்பணம். ஆச்சார்யருக்கு அரிசி, வாழைக்காய் முதலானவற்றுடன் தட்சணை வழங்கி தர்ப்பணம் செய்வது என்று விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

தர்ப்பணம். இது, அமாவாசை நாளில் செய்வது போல் தர்ப்பணம் செய்வது இது. இவற்றில் எந்த முறையில் வேண்டுமானாலும் தர்ப்பணம் செய்து, முன்னோரை ஆராதிக்கலாம்.

முக்கியமாக ஒரு விஷயம்... மகாளய தர்ப்பணம் செய்பவர்கள், மகாபரணியிலும் மத்யாஷ்டமியிலும் மஹாவ்யதீபாதத்திலும் கஜச்சாயாவிலும் மறக்காமல் தர்ப்பணம் செய்து, தானங்கள் செய்வது மிகவும் உத்தமம்.

என்னால் எளிமையாகத்தான் தர்ப்பணம் செய்ய முடியும் என்பவர்கள், தினமும் முன்னோர்களின் நாமாக்களைச் சொல்லி, எள்ளும் தண்ணிரும் விட்டு, தர்ப்பணம் செய்து வழிபடலாம்; வணங்கலாம். மகாளய பட்ச காலத்தில், முன்னோரை நாம் நினைக்க வேண்டும். வணங்கி வழிபட வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.

மகாளய பட்சத்தில் ஒவ்வொரு நாளும் தர்ப்பணம் செய்வது இன்னும் இன்னும் பல பலன்களையும் புண்ணியங்களையும் சேர்க்கும். நம்மையும் நம் சந்ததியையும் எந்தத் தடைகளுமின்றி வாழவைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x