ஆன்லைனில் நேரலையில் தடை நீக்கும் ஆவணி பிரதோஷம்;  திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஏற்பாடு  

ஆன்லைனில் நேரலையில் தடை நீக்கும் ஆவணி பிரதோஷம்;  திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஏற்பாடு  
Updated on
1 min read

ஆவணி மாத பிரதோஷம் இன்று (30.8.2020). பிரதோஷமும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலமும் இணைந்த இந்தநாளில், சிவ பூஜையை நேரலையில் தரிசியுங்கள். வீட்டிலிருந்தே தரிசியுங்கள். சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் இன்றைய பிரதோஷ பூஜையை பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் நேரலையில் தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
.

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பபி வருகிறது கோயில் நிர்வாகம்.

பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், இன்று 30.8.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை மூலம் ஒளிபரப்பாகிறது. உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் தரிசித்து அருள்மிகு வடிவுடை அம்மன் சமேத ஸ்ரீதியாகராஜ சுவாமியின் பேரருளைப் பெறுங்கள்.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும், இந்த தகவலினை தங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைப்பது போலவே அவர்களுக்கும் சிவனருள் கிடைக்கட்டும். அவர்களும் நிம்மதியும் அமைதியுமான ஆனந்த வாழ்க்கையை வாழ சிவனாரின் அருள் உங்களுக்குக் கிடைக்கட்டும்.

ஆவணி மாதத்தின் பிரதோஷம் இது. ஞாயிற்றுக்கிழமையில் ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை. பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பதும் மாலை 4.30 முதல் 6 மணி வரைதான். ஆகவே, ராகுகால வேளையில் பிரதோஷ பூஜையைத் தரிசிப்பது தோஷங்களையெல்லாம் நீக்கும். சந்தோஷத்தைப் பெருக்கும்.

எனவே, அற்புதமான ஆவணி மாத ஞாயிறு பிரதோஷத்தை வீட்டில் இருந்தபடியே தரிசியுங்கள். ஞாயிற்றுகிழமையன்று வரும் பிரதோஷ தரிசனம், தடைப்பட்ட காரியங்களையெல்லாம் நடத்தித் தரவல்லது.

பிரதோஷ அபிஷேகத்தை, சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜையை இன்றைய நன்னாளில் (30.8.2020) ஞாயிற்றுக்கிழமையில்... நேரலையில் தரிசியுங்கள். தியாகராஜ சுவாமியின் பேரருளைப் பெறுங்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in