

வருகிற செப்டம்பர் 1ம் தேதி, ராகு - கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, கும்பகோணம் - திருநாகேஸ்வரம் கோயிலில், ராகு - கேது பெயர்ச்சியையொட்டி, சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அன்றைய நாளில், இதனை ஆன்லைனில் நேரலையில் தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோயில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணம் அருகில் உள்ளது திருநாகேஸ்வரம். இங்கே அமைந்துள்ள அற்புதக் கோயில்... ஸ்ரீநாகநாதஸ்வாமி திருக்கோயில் (இராகு ஸ்தலம்). ராகுகால வேளையில், இங்கே நாகநாதரை தரிசனம் செய்தல், ராகு முதலான தோஷங்கள் நீங்கும். சர்ப்ப தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
வருகின்ற 01-09-2020 செவ்வாய்க் கிழமை ராகு - கேது பெயர்ச்சி நிகழ்கிறது. இதையொட்டி, திருநாகேஸ்வரம் திருத்தலத்தில், காலை 10.30 மணி முதல் 2.30 மணி வரை சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன. இந்த பூஜையையும் அபிஷேக ஆராதனைகளையும் பக்தர்கள் வீட்டிலிருந்தே தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு, ராகு ஸ்தலத்தில், சிறப்பு அபிஷேகத்தை பக்தர்கள் கண்டுகளிக்க ஆன்லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்ப ஆலய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பக்தர்கள் https://www.youtube.com/channel/UCzuDqbx-8DVwSATVoWCFOHw?view_as=subscriber என்ற YouTube channel மூலம், 01.09.2020 காலை 10.30 மணிக்கு நேரலை ஒளிபரப்பு மூலம், தரிசித்து அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ராகு பகவானின் பேரருளைப் பெறலாம்.
இந்தத் தகவலினை தங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் நேரலையில் தரிசித்து, நாகநாத சுவாமியின் அருளைப் பெறுங்கள் என்று ஆலய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.