Last Updated : 12 Aug, 2020 09:26 PM

 

Published : 12 Aug 2020 09:26 PM
Last Updated : 12 Aug 2020 09:26 PM

நோயுற்றவர்களுக்காக பிரார்த்தனை; ஆரோக்கியத்தை தரும் தன்வந்திரி பகவான் வழிபாடு! 

நோய்களையெல்லாம் தீர்க்கும் தெய்வம்... தன்வந்திரி பகவான். தமிழகத்தில், தன்வந்திரி பகவானுக்கென்று கோயில்கள் அவ்வளவாக இல்லை. ஆனாலும் பிற்காலத்தில், தன்வந்திரிக்கு சில இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டு, வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேசமயம், தன்வந்திரி பகவானை வீட்டிலிருந்தே வழிபடலாம். நோயாளிகள்தான் வழிபடவேண்டும் என்றில்லை. நோயுற்றவர்களுக்காக எவர் வேண்டுமானாலும் வேண்டிக்கொண்டு, தன்வந்திரியை வழிபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

பொதுவாகவே, திரயோதசி எனப்படும் பிரதோஷ நாள், சிவனாருக்கு உரிய நாள் என்பது போல், நரசிம்மருக்கு உகந்த நாள் என்பது போல, தன்வந்திரி பகவானுக்கும் திரயோதசி ரொம்பவே விசேஷம். குறிப்பாக, தேய்பிறை திரயோதசி,அதாவது அமாவாசைக்கு முன்னதாக வருகிற திரயோதசி ரொம்பவே விசேஷம். தவிர, எந்த நாளிலும் தன்வந்திரியை வணங்கலாம். பூஜிக்கலாம். விரதம் மேற்கொள்ளலாம்.

ஓம் நமோபகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
சர்வாமய விநாசனாய த்ரைலோக்யநாதாய
ஸ்ரீமஹா விஷ்ணவே நம:

என்பது ஸ்ரீதன்வந்திரி பகவான் மந்திரம்.

அதாவது, பாரபட்சமில்லாமல், எல்லோருக்கும் வரம் தந்தருளுகிற வாசுதேவராக இருப்பவரே. அமிர்த கலசத்தை திருக்கரத்தில் ஏந்திக்கொண்டிருப்பவரே. மூவுலகத்தையும் பார்த்தபடி, சகல நோய்களையெல்லாம் தீர்த்து அருளுபவரே. மகாவிஷ்ணுவாக, திருமாலாக அவதரித்திருப்பவரே. தன்வந்திரி பகவானே... உமை வணங்குகிறேன். நோய்களையெல்லாம் தீர்த்தருள்வாயாக! என்று அர்த்தம்.

இந்த மந்திரத்தை, நோய்வாய்ப்பட்டவர்களுக்காக தினமும் 21 முறை சொல்லுங்கள். நீங்கள் யாருக்காக பிரார்த்தனை செய்தீர்களோ, அவர்களின் தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். நீண்ட காலம், ஆரோக்கியமாக வாழ்வார்கள்.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x