பலமும் வளமும் தருவாள் பாலா திரிபுரசுந்தரி! 

பலமும் வளமும் தருவாள் பாலா திரிபுரசுந்தரி! 

Published on

நம்மையெல்லாம் குழந்தையைப் போல் பார்த்துக் கொள்பவள்தான் அன்னை மகாசக்தி. எல்லோரையும் பிள்ளையாக பாவித்து நம்மை சதாசர்வகாலமும் காபந்து செய்பவள்தான் அன்னை பராசக்தி.

சக்தியின் வடிவங்கள் பல. காஞ்சியில் காமாட்சியாகவும் மதுரையில் மீனாட்சியாகவும் இருக்கிறாள். நெல்லையில், காந்திமதியாகவும் சங்கரன்கோவிலில் கோமதியாகவும் இருந்து அருள்பாலிக்கிறாள்.

கன்னியம்மன், மாரியம்மன், செல்லியம்மன், காளியம்மன் என்றெல்லாம் அம்மனை வெவ்வேறு பெயர்களின் சொல்லி வழிபடுகிறோம். ஒவ்வொரு வடிவமாகக் கொண்டிருக்கும் அம்பிகையைக் கொண்டாடுகிறோம்.

அந்த வடிவங்களில் மிகவும் வித்தியாசமானது... வித்தியாசமானவள்... நம்மை குழந்தை போல் பாவித்து அருள்பாலிக்கும் அன்னையே, குழந்தையாக, சிறுமியாக இருந்து அருள்பாலிக்கும் தெய்வம்... ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி.

பாலா திரிபுரசுந்தரி கருணைக் கடல். அன்பே உருவெனக் கொண்டவள். அருளையே வடிவமெனக் கொண்டவள். தீயதை அழிப்பதையே காரணமாகக் கொண்டு காட்சி தருபவள்.

பாலா திரிபுரசுந்தரியை வணங்குங்கள். அவளின் காயத்ரியைச் சொல்லுங்கள். ஒரு பத்துநிமிடம் கண்கள் மூடி, எந்தநாளாக இருந்தாலும் அவளிடம் உங்கள் குறைகளையெல்லாம் சொல்லி முறையிடுங்கள். சொன்ன சொல் மாறாத குழந்தையென ஒரு தாயைப் போல் ஓடிவந்து நம்மைக் காத்தருள்வாள் தேவி.

ஓம் பால ரூபாயை வித்மஹே
ஸதா நவ வர்ஷாயை தீமஹி
தந்நோ பாலா ப்ரசோதயாத்

அதாவது, குழந்தை உருவான அன்னையே. அழல்கண் அரனின் தேவியே. கருணையை மழையாகப் பொழிபவளே. எங்கள் பாலா திரிபுரசுந்தரியே உன்னை வணங்குகிறேன்.

முடியும்போதெல்லாம், பாலா திரிபுர சுந்தரியை வணங்குங்கள். அவளின் காயத்ரியை ஜபித்து பிரார்த்தனை செய்யுங்கள். வாழ்வில் சகல செளபாக்கியங்களையும் தந்தருள்வாள் பாலா! பலமும் வளமும் தந்து நம்மைக் காப்பாள் பாலா!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in