Published : 03 Sep 2015 11:05 AM
Last Updated : 03 Sep 2015 11:05 AM

வார ராசி பலன் 03-09-2015 முதல் 09-09-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 5-ல் சூரியனும் குருவும், 6-ல் புதனும் ராகுவும் உலவுவது சிறப்பு. செல்வாக்கும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். நல்லவர்களின் தொடர்பு வலுக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். பண வரவு அதிகரிக்கும்.

ஊக வணிகம், கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். மகப்பேறு அல்லது பிள்ளைகளால் பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பெற்றோர் ஆற்றுவதற்கான சந்தர்ப்பம் உருவாகும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். 5-ம் தேதி முதல் மாறுவதால் வேலைப்பளு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 3, 5, 9.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், பொன்நிறம், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5, 6. ‎

பரிகாரம்: செவ்வாய், சனிக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், சுக்கிரனும், 6-ல் சனியும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. சூரியன் புதன், குருவால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். வார ஆரம்பத்தில் செலவுகள் சற்று கூடும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.

வார மத்தியில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல்நலம் சீராகும். முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வாரப் பின்பகுதியின் பணப்புழக்கம் சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பேச்சில் இனிமையும் திறமையும் கலந்திருக்கும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 3, 5, 9.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, நீலம், ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 1, 5, 6, 7. 8, 9.

பரிகாரம்: துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் சூரியனும், 4-ல் புதனும், 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் வருவாய் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப் பணியாளர்களது எண்ணம் ஈடேறும். நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள்.

வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். மாணவர்களது திறமை வெளிப்படும். ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் புகழும் பொருளும் பெறுவார்கள். உடன்பிறந்தவர்களால் அளவோடு நலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். பெண்களின் நிலை உயரும். முக்கியப் பதவிகளும் பொறுப்புக்களும் பெறச் சந்தர்ப்பம் உருவாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள் : செப்டம்பர் 3, 5, 9.

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை, வான்நீலம், மெரூன்.

எண்கள்: 1, 5, 6, 7.

பரிகாரம்:

குரு, தட்சிணாமூர்த்தி, துர்க்கைக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும், 2-ல் சூரியன் குருவும், 3-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். முக்கியமான எண்ணங்களில் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். நண்பர்கள் உதவுவார்கள். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். விருந்து உபசாரங்களில் ஈடுபாடு கூடும். மன உற்சாகம் பெருகும். அரசு உதவி கிடைக்கும். அரசுப் பணியாளர்களது நோக்கம் நிறைவேறும். குருவும், தனஸ்தானாதிபதி சூரியனும் சேர்ந்து ராசிக்கு 2-ல், தனஸ்தானத்தில் உலவுவதால் ஏராளமான செல்வம் குவியப் போகிறது.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 3, 5, 9.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 4, 6.

பரிகாரம்:

முருகனை வழிபடவும். சனிப் பிரீதி செய்வது அவசியம்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சூரியனும், 2-ல் புதனும், 3-ல் சனியும் உலவுவது சிறப்பு. புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும். எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். குடும்ப நலம் சிறக்கும். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, ஓவியம், சிற்பம், தரகு சம்பந்தமான தொழில் லாபம் தரும். உழைப்பு வீண்போகாது.

புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். காடு, மலைகளில் தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவார்கள். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். செல்வாக்கு உயரும். கம்பீரமாக நடைபோடுவீர்கள். அரசாங்கப் பதவிகள் தேடிவரும். சமுதாயத்துக்காகப் பாடுபடுவீர்கள். இரக்க சுபாவம் உண்டாகும். பிள்ளைகளாலும் பெற்றோராலும் அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 3, 5, 9.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: பச்சை, நீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 6, 8.

பரிகாரம்:

செவ்வாய், ராகு, கேதுவுக்கு ஆராதனைகளைச் செய்யவும். சுப்பிரமணியரை வழிபடவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசி அதிபதி புதன் ராசியிலேயே இருக்கிறார். செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் 11-ல் இருப்பது விசேஷம். வார முன்பகுதியில் சந்திரன் 8-ல் உலவுவது சிறப்பாகாது. சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை. மனதில் ஏதேனும் சலனம் உண்டாகும். 5-ம் தேதி முதல் புனிதமான காரியங்களில் கலந்துகொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.

சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். 5-ம் தேதி முதல் சனி 3-ம் இடம் மாறுவதால் பொது நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். மனத்துணிவு மேலும் கூடும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 5, 9.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, நீலம், பச்சை.

எண்கள்: 5, 6, 9.

பரிகாரம்:

நாக பூஜை செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x