ஐஸ்வரியம் அருளும் சொர்ணாகர்ஷண பைரவ ஸ்லோகம்; வீட்டிலேயே செய்யும் எளிய வழிபாடு

ஐஸ்வரியம் அருளும் சொர்ணாகர்ஷண பைரவ ஸ்லோகம்; வீட்டிலேயே செய்யும் எளிய வழிபாடு
Updated on
1 min read

தேய்பிறை அஷ்டமியில், பைரவருக்கு உரிய நன்னாளில், அவரை வணங்கி வந்தால், மனதில் இருக்கிற தேவையற்ற பயமெல்லாம் விலகி ஓடும். இந்தநாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்குவோம். எல்லா நல்லதுகளையும் வாரி வழங்குவார் காலபைரவர் என்பது ஐதீகம்! இன்று 13ம் தேதி தேய்பிறை அஷ்டமி.

இந்தநாளில் பைரவ காயத்ரி சொல்லி வழிபடுவது இன்னும் மகத்துவமான பலன்களைத் தரும் என்பது ஐதீகம்.

பைரவ காய்த்ரீ மந்திரங்களைச் சொல்லி, பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும்; எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கும்.

அதேபோல், இந்த நாளில் பைரவருக்கு வடைமாலை சார்த்தியும் வேண்டிக் கொள்ளலாம். அல்லது வடை நைவேத்தியம் செய்தும் பிரார்த்தனை செய்யலாம்.
தேய்பிறை அஷ்டமி நாளில், செவ்வரளி மாலை சார்த்தி, மிளகு அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும். கடன் தொல்லையில் இருந்து காலபைரவர், மீளச்செய்வார். கவலைகள் அனைத்தும் பறந்தோடும்.

அஷ்டமி நாளில், பைரவர் காயத்ரீ சொல்லி வழிபடுவோம். தெருநாய்களுக்கு உணவளிப்போம்.

ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்
**************

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்
***********

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத்

**********

இந்த மந்திரங்களைச் சொல்லுங்கள். அஷ்டமி என்றில்லாமல் எல்லா நாளும் சொல்லி வழிபடலாம். இந்த ஸ்லோகங்களைச் சொல்லி வழிபட்டு, தெருநாய்களுக்கு இரண்டு பிஸ்கட்டாவது வழங்குங்கள்.

அதேபோல், பைரவ ரூபங்களில் சொர்ணாகர்ஷண பைரவர் ரொம்பவே விசேஷமானவர். தனம் தானியம் பெருக்கித் தரும் ஸ்லோகம் இது. கடன் தொல்லையில் இருந்து நம்மை மீட்டுத் தந்தருள்வார் பைரவர்.

சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்:

ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லும் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரும்ஸக; வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம;

இந்த ஸ்லோகங்களைச் சொல்லி, தேய்பிறை அஷ்டமியில், பைரவரை வழிபடுவோம். ஐஸ்வர்ய கடாக்ஷம் பெறுவோம். பயமின்றி வாழ்வோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in