Published : 04 Jul 2020 07:27 AM
Last Updated : 04 Jul 2020 07:27 AM

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்: திருவாபரணங்கள் சீர்செய்து மெருகூட்டப்பட்டன

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாளுக்கு நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடை பெற்றது. திருவாபரணங்கள் சீர் செய்து மெருகூட்டப்பட்டன.

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உற்சவர் நம்பெருமாளுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத் திரத்தன்று ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, அம்மா மண் டபம் காவிரி ஆற்றிலிருந்து பட்டாச்சாரியார்கள், திருமஞ்சன ஊழியர்கள் வெள்ளிக் குடங்களில் புனித நீரை கோயிலுக்கு எடுத்து வந்தனர். கோயில் வாசலில் இருந்து புனித நீர் தங்கக் குடங் களுக்கு மாற்றப்பட்டு யானை ஆண்டாள் மீது வைத்து ரங்கநாதர் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டது.

பின்னர் ரங்கநாதர், உற் சவர் நம்பெருமாள், உபய நாச்சி யார்கள் ஆகியோரது திருமேனிகளில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப் பட்டது. சிறு பழுதுகள் சீர் செய்யப்பட்டு தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன. தொடர்ந்து நம்பெருமாள், உபயநாச்சியார்களுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

மூலவருக்கு தைலக்காப்பு

கோயிலில் உள்ள மூலவர் ரங்கநாதருக்கு ஆண்டுக்கு 2 முறை தைலக்காப்பு பூசப் படும். அதன்படி, முதல் தைலக் காப்பு நேற்று பூசப்பட்டது. 48 நாட்களுக்கு பிறகு இந்த தைலம் உலர்ந்த பின்னரே ரங்கநாதரின் திருமேனியை முழுமையாக தரிசிக்க முடியும். அதுவரை திருமுகத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.

ஊரடங்கு காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக் கப்படாத நிலையில், கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன், அறங் காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x