

ஆலயங்களில் நடைபெறும் முக்கியமான பூஜைகளைத் தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள், கூடுவார்கள். சுவாமி தரிசனம் கண்டு நெகிழ்வார்கள். இப்போதைய சூழலில், வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியே பூஜைகளைத் தரிசிக்க திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயில் ஏற்பாடு செய்துள்ளது.
ஏற்கெனவே, கடந்த மே 5ம் தேதி, 20ம் தேதி மற்றும் ஜூன் 3ம் தேதி ஆகிய நாட்களில் வந்த பிரதோஷத்தின் போது, ‘ஆன்லைன்’ மூலமாக, பிரதோஷ பூஜையை ஒளிபரப்பு செய்தது ஆலய நிர்வாகம். இந்த ‘ஆன்லைன்’ பிரதோஷ பூஜை ஒளிபரப்பை ஏராளமான பக்தர்கள், தரிசித்து மகிழ்ந்தார்கள்.
இதையடுத்து ஆனி மாதத்தின் முதல் பிரதோஷம் 18.06.2020 வியாழக்கிழமை வருகிறது. வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். குருவாரப் பிரதோஷம் என்பது இன்னும் ரொம்பவே விசேஷமானது. மகத்துவம் நிறைந்தது.
எனவே நாளைய தினம், 18.06.2020 வியாழக் கிழமையான நாளைய தினம், பிரதோஷ நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 18.06.2020 வியாழக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகத்தையும் அதனைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த பிரதோஷ பூஜையைத் தரிசித்து அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை திரிபுர சுந்தரி அம்மன் அருள்பெறலாம்.
மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும். இந்த தகவலை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அனைவரும் பிரதோஷ வழிபாட்டினை நேரலையில் கண்டு சிவனாரின் அருளைப் பெறுங்கள் என திருவொற்றியூர் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.