

சனி ஹோரை, அசுப கிரக ஓரை. இந்த ஹோரை உள்ள தருணங்களில், மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இந்த ஹோரையில்தான் சிறை வாசம், சண்டை, எதிரிகளால் துன்பம் போன்றவை ஏற்படும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.
எந்தவித சுபகாரியங்களும் இந்த ஹோரையில் செய்யக்கூடாது. அதேபோல, அறுவை சிகிச்சை செய்தல் மற்றும் புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது.
அதேசமயத்தில், பொருள் சேர்க்கை பற்றிப் பேசலாம். கடனை அடைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளலாம். பழைய வீடு, வாகனம் மற்றும் இயந்திரம் வாங்க முற்படலாம். பூர்வ ஜென்ம பாவம் தீர்க்க பரிகாரங்கள் செய்யலாம்.
இன்னும் இருக்கிறது. உழைப்பு பற்றிய பேச்சு வார்த்தையோ, சட்டப்பூர்வமான விஷயங்கள் குறித்து முடிவெடுக்கலாம். மரம் செடி நடும் பணியில் ஈடுபடலாம். நடைப்பயணம் துவங்கவும் சனி ஹோரை நல்லது.
இந்த ஹோரையில் காணாமல்போன பொருள் கிடைக்காது என்கிறது சாஸ்திரம். அப்படியே கிடைப்பதாக இருந்தாலும் பல வருடம் கழித்து எதிர்பாராத விதமாகத்தான் கிடைக்கும்.
ஜோதிடர்களுக்கு ஹோரையை வைத்துத்தான், நல்ல நாளில் முக்கிய நல்ல நேரத்தைக் கணக்கிடவே முடியும்.
இன்னும் ஹோரை பற்றிச் சொல்லவேண்டுமானால் வெள்ளிக்கிழமை, குரு ஹோரையைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. சிலநேரங்களில் ஹோரை தோஷத்தினால் பாதிப்பு ஏற்படும். நம்மை அறியாமலேயே ஹோரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். எந்தெந்த ஓரையில் பிறந்தால் எவ்வாறெல்லாம் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஹோரை என்பது காலத்தின் ரகசிய கணக்கு, அதனைத் தெரிந்துவைத்துச் செயல்பட்டால் நல்லது. ஒருவருக்கு இந்த சுப ஹோரைகள் மிக மோசமான தசை, புத்தி காலத்திலும் உதவும், பலம் தரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.