Published : 12 Jun 2020 17:10 pm

Updated : 14 Jun 2020 09:18 am

 

Published : 12 Jun 2020 05:10 PM
Last Updated : 14 Jun 2020 09:18 AM

நாளை... தெருநாய்களுக்கு  பிஸ்கட்டாவது போடுங்க;  சனி தோஷம் விலகும்; கஷ்டம் நீங்கும்; வாஸ்து நிவர்த்தியாகும் 

bairavar

தேய்பிறை அஷ்டமியில் பைரவ வழிபாடு

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுவது மிகுந்த பலத்தைத் தரும். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். நாளைய தினம் ஜூன் 13ம் தேதி சனிக்கிழமை, தேய்பிறை அஷ்டமி. பைரவரை மனதார வழிபடுங்கள். பைரவரை மனதார நினைத்துக் கொண்டு, தெருநாய்களுக்கு உணவளிப்போம். இது மிகப்பெரிய புண்ணியத்தையும் வளத்தையும் நலத்தையும் தந்தருளும்.


ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் அஷ்டமி திதி வரும். வளர்பிறை அஷ்டமியிலும் பைரவரை வழிபடலாம் என்றாலும் தேய்பிறை அஷ்டமியே மிகவும் உகந்தது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


பைரவரின் தலை மேஷ ராசி, வாய் ரிஷப ராசி, கைகள் மிதுன ராசி, மார்பு கடக ராசி, வயிற்றில் சிம்ம ராசி, இடையில் (இடுப்பு) கன்னி ராசி, புட்டத்தில் துலாம் ராசி, பிறப்பு உறுப்பில் விருச்சிக ராசி, தொடையில் தனுசு ராசி, முழங்காலில் மகர ராசி, காலில் கீழ்ப்பகுதி கும்ப ராசி, காலின் அடியில் (பாதப் பகுதி) மீன ராசி என அமைந்துள்ளன என்கிறது புராணம்.


ஆகவே, பைரவரை, தேய்பிறை அஷ்டமி நாளில், வணங்கினால், அஷ்டமத்து சனி உள்ளவர்களும் கிரக தோஷம் நீங்கப் பெறுவார்கள். அதேபோல், ஏழரைச் சனியால் பீடித்திருப்பவர்களும் கிரக தோஷம் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள். தோஷங்களை நீக்கி சந்தோஷத்தைத் தந்தருளும் மகாசக்தி கொண்டவர் பைரவர்.
அதேபோல், அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும் போற்றப்படுகிறார் பைரவர். சுக்கிர தோஷத்தை நீக்குபவராகவும் பைரவர் திகழ்கிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். சுக்கிர தோஷம் விலகும். சுக்கிர தோஷம் கிடைக்கப் பெறுவீர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


நாளைய தினம் ஜூன் 13ம் தேதி அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. வைகாசி மாதத்தின் அஷ்டமி. சனிக்கிழமையும் அஷ்டமியும் இணைந்து வருவது இன்னும் சிறப்பு வாய்ந்தது. எனவே, நாளைய தினம் வீட்டிலிருந்தபடியே பைரவரை வணங்குங்கள். மனதார உங்கள் கோரிக்கைகளை, கஷ்டங்களை, குறைகளை அவரிடம் முறையிட்டு வேண்டிக்கொள்ளுங்கள்.


சிவ அம்சமான பைரவருக்கு, வில்வம் மிகவும் உகந்தது. வில்வம் சார்த்தி வழிபடுங்கள். செந்நிற மலர்களும் மகத்துவம் வாய்ந்தவை. தாமரையும் தும்பைப்பூவும் கிடைத்தால், இன்னும் விசேஷம். எனவே, இந்த மலர்களில் ஏதேனும் ஒன்றை பைரவருக்கு சூட்டி மகிழுங்கள். ஆலய சிவாச்சார்யரிடம் இந்த மலர்களை வழங்கி, பைரவருக்கு வழங்குங்கள்.


வீட்டில் வேண்டிக்கொண்டு, தயிர்சாதம் அல்லது மிளகு சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். வடைமாலை சார்த்துவது அனுமனைப்போலவே பைரவருக்கும் சிறப்புக்கு உரியதுதான். எனவே பைரவருக்கு வடைமாலை சார்த்துவதாக வேண்டிக்கொள்ளுங்கள்.


முடிந்தால், தெருநாய்களுக்கு தயிர்சாதம் வழங்குங்கள். பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கி, உங்களால் முடிந்த அளவுக்கு தெருநாய்களுக்கு வழங்குங்கள். உங்களைப் பீடித்திருந்த தோஷங்கள் அனைத்தும் விலகும். உங்கள் குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள்.


பில்லி முதலான சூனியங்கள் அனைத்தும் விலகும். முன்னோர் ஆசி கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டின் வாஸ்து குறைபாடுகளும் நீங்கப் பெற்று, நிம்மதியும் முன்னேற்றத்துடனும் வாழ்வீர்கள்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!


நாளை... தெருநாய்களுக்கு  பிஸ்கட்டாவது போடுங்க;  சனி தோஷம் விலகும்; கஷ்டம் நீங்கும்; வாஸ்து நிவர்த்தியாகும்பைரவர்காலபைரவர்தெருநாய்கள்தேய்பிறை அஷ்டமிவாஸ்து நிவர்த்தி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author