‘ஆன்லைனில்’ புண்ணியம் தரும் பிரதோஷ பூஜை !  திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் ஏற்பாடு

‘ஆன்லைனில்’ புண்ணியம் தரும் பிரதோஷ பூஜை !  திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் ஏற்பாடு
Updated on
1 min read

பிரதோஷ பூஜையை இந்தக் காலகட்டத்தில் எல்லோரும் வீட்டிலிருந்தபடியே கண்ணாரத் தரிசிக்கும் வகையில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில், பிரதோஷ பூஜையை ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பியது.

பிரதோஷ பூஜை, மகா புண்ணியம் என்கிறது புராணம். பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வதும் அன்று விமரிசையாக நடைபெறும் நந்திதேவர் அபிஷேகமும் தரிசிக்க, நம் பாவங்களெல்லாம் தொலையும் புண்ணியங்கள் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை (05.05.2020 மற்றும் 20.05.2020 ஆகிய நாட்களில்) 'ஆன்லைன்' மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பியது. இதனை ஏராளமான பக்தர்கள், தரிசித்து மகிழ்ந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 03.06.2020 புதன் கிழமையும் பிரதோஷ நிகழ்ச்சியினை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டு, அதன்படி ஒளிபரப்பியது.

பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 03.06.2020 புதன்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நந்தி அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் பார்த்து தரிசித்தனர். அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை திரிபுர சுந்தரி அம்மனின் அருளைப் பெற்றனர்.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும், இந்த தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அனைவரும் பிரதோஷ வழிபாட்டினைத் தரிசித்து இறைவன் அருள் பெறவும் உதவுங்கள் என ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in