Published : 28 May 2020 13:29 pm

Updated : 28 May 2020 13:29 pm

 

Published : 28 May 2020 01:29 PM
Last Updated : 28 May 2020 01:29 PM

கல்வியில் வெற்றி; உடலில் ஆரோக்கியம்; புத்தியில் தெளிவு;  மனதில் துணிவு; மகாவிஷ்ணு ஸ்லோக மகிமை!  

vishnu-slogam

மகாவிஷ்ணுவை நாடினால் துன்பமில்லை. விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கு இணையான ஸ்லோகமில்லை என்பார்கள் ஆச்சார்யர்கள். அத்தனை வலிமை மிக்கது விஷ்ணு சகஸ்ரநாமம்.


விஷ்ணு சகஸ்ரநாமத்தைச் சொல்லச் சொல்ல நம் வாழ்வின் அத்தனை துன்பங்களும் பறந்தோடிவிடும். தடைகளெல்லாம் தகர்ந்துவிடும் என்பது ஐதீகம்.
நம் குழந்தைகள் கல்வியில் சிறந்துவிளங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு. குழந்தைகளோ அல்லது குழந்தைகளுக்காக நாமோ இந்த ஸ்லோகத்தைச் சொல்ல, நம் மகனோ மகளோ... கல்வியிலும் கலைகளிலும் வெற்றி பெறுவார்கள். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள்.படிப்பில் சிறக்கச் செய்யும் ஸ்லோகம் :


வேதோ வேதவித வ்யங்கோ
வேதாங்கோ வேதவித் கவி:


இந்த ஸ்லோகத்தை முடியும்போதெல்லாம் சொல்லுங்கள்.


நோயற்ற வாழ்வு என்பதே ஆகச்சிறந்த செல்வம். எண்சாண் உடலுக்கு வயிறே பிரதானம் என்பதுதான் புதுமொழி. வயிறு முதலான முக்கிய பாகங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், ஏதேனும் நோய் தாக்கினால், இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் போதும்... விரைவில் நோய் நீங்கும். ஆரோக்கியம் பெருகும். ஆயுளும் கூடும். இயலாதவர்களுக்கு, முதியோருக்கு அன்னதானம் செய்யுங்கள்.


அந்த ஸ்லோகம் இதுதான் :


ப்ராஜிஷ்ணுர் போஜனம் போக்தா
ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:


மனம்தான் நம்மை ஆட்டிப்படைக்கிறது. அது சோர்வாக இருந்தால், நம் உடலும் சோர்வாகிவிடும். அது கவலையுற்றிருந்தால் உடலானதும் தளர்ச்சியுற்றுவிடும். மாறாக, மனம் சந்தோஷத்தில் இருந்தால், உடலும் கூத்தாடும். மனக்கிலேசத்தில் இருந்தும் மனோபயத்தில் இருந்தும் விலகி, மனதிடத்துடன் திகழச் செய்யவும் நம் மனதையும் நம்மையும் எப்போதும் உற்சாகத்துடன் வைத்திருக்கவும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். மகாவிஷ்ணுவை மனதார நினைத்து வேண்டிக்கொள்ளுங்கள். மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள்.


அதீந்த்ரியோ மஹாமாயோ
மஹோத்ஸாஹோ மஹாபல:


செய்யும் காரியத்தில் தெளிவு வேண்டும். பேசும் பேச்சில் தெளிவு வேண்டும். உடலை விட பன்மடங்கு புத்தியானது விழித்துக்கொண்டிருக்கவேண்டும். நம்முடைய மூளை எப்போதும் சுறுசுறுப்புடன், விழிப்புடன், மலர்ச்சியுடன், அயர்ச்சியின்றி இருந்தால்தான் எந்தச் சூழலில் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அவற்றில் நாம் ஜெயிக்கமுடியும்.

புத்தியில் சோர்வு ஏற்படும் போதெல்லாம், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறும்போதெல்லாம், மூளையானது குழம்பித் தவிக்கும் போதெல்லாம் இந்த ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். மகாவிஷ்ணுவுக்கு துளசி சார்த்தி, துளசி தீர்த்தம் பருகி, வேண்டிக்கொள்ளுங்கள். புத்தியில் தெளிவு ஏற்படும். காரியத்தை ஒன்றிச் செயல்பட கிரியா ஊக்கியாக இருக்கும். எலுமிச்சை சாதம் அல்லது புளியோதரை என ஏதேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள்.

மஹா புத்திர் மகாவீர்யோ
மகாசக்திர் மஹாத்யுதி:


கண்ணில் ஒளியிருந்தால், வெளிச்சத்தையும் அறியலாம். இருளிலும் நடக்கலாம். படிக்கவும் பார்க்கவும் நடக்கவும் இந்த வாழ்க்கை முழுக்க ஓடவும் கண்ணொளி மிக மிக அவசியம்.


இந்த ஸ்லோகத்தைச் சொல்லி திருமாலை வழிபட்டு வந்தால், iஇயலாதவர்களுக்கு தயிர் சாதம் வழங்கிவந்தால், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். பார்வையில் ஒளி கூடும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஸஹஸ்ரமூர்த்தா விஸ்வாத்மா
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்


தவறவிடாதீர்!

கல்வியில் வெற்றி; உடலில் ஆரோக்கியம்; புத்தியில் தெளிவு;  மனதில் துணிவு; மகாவிஷ்ணு ஸ்லோக மகிமை!மகாவிஷ்ணுவிஷ்ணு சகஸ்ர நாமம்கல்விமனோதிடம்புத்தி தெளிவுகண்ணொளி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x