Last Updated : 26 May, 2020 07:02 PM

 

Published : 26 May 2020 07:02 PM
Last Updated : 26 May 2020 07:02 PM

கடன் தொல்லை தீரும்; புதன்கிழமையில் வராஹி வழிபாடு! எந்தக் கிழமையில் வணங்கினால் என்னென்ன பலன்கள்? 

அபய நாயகி என்றுதான் வராஹியைக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். கவலை, துக்கம், பயம், குழப்பம், எதிர்ப்பு, பகை என்று கலங்கிக் கொண்டே இருப்பவர்களின் கண்ணீரைத் துடைப்பவள், வராஹி.


எந்த நாளில், வராஹி தேவியை வணங்கினால், என்னென்ன பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்று விவரித்துள்ளனர் ஆச்சார்யப் பெருமக்கள்.


வாராஹி தேவிக்கு பல ரூபங்கள் இருக்கின்றன என்கிறது புராணம். அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, மந்திர வாராஹி, வார்த்தூளி என்றெல்லாம் வடிவங்கள் உண்டு என்றும் நான்கு, எட்டு, பதினாறு கரங்கள் என காட்சி தருபவள் என்று சிலாகிக்கிறார்கள்.


பொதுவாகவே, செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வராஹியை வழிபடுவது கூடுதல் பலனையும் பலத்தையும் வளத்தையும் தந்தருளும்.


நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வாராஹியை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும்.


திங்கட்கிழமையில், மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள், எதற்கு எடுத்தாலும் பயந்து வருந்துபவர்கள் வழிபடுவது நல்ல நல்ல பலன்களை வழங்கும்.


நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சினைகளில் இருந்து வழிபட செவ்வாய்க்கிழமையில் வழிபடுங்கள் என்கிறார்கள் சாக்த வழிபாடு செய்பவர்கள்.


புதன்கிழமையன்று கடன் தொல்லை அகலுவதற்கும் சொத்துக்கள் மீதான வழக்கில் சிக்கித் தவிப்பவர்களும் இழந்த செல்வங்களை நினைத்து கதறுபவர்களும் வழிபட இழந்ததெல்லாம் கிடைக்கும். கடனையெல்லாம் அடைப்பீர்கள். சொத்துப் பிரச்சினையில் ஜெயம் உண்டாகும்.


குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளில் வழிபட வேண்டும்.


வெள்ளிக்கிழமை அன்று வராஹியை வழிபட்டால், மாங்கல்ய பலம் பெருகும். கணவரின் ஆயுள் நீடிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். வியாபாரம் விருத்தி அடையும்.

சனிக்கிழமை அன்று வழிபட்டு வேண்டிக் கொண்டால், கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். குழந்தைகள் அறிவு மற்றும் ஆரோக்கியத்துடன் வளருவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பமும் சச்சரவும் விலகும்.


27.5.2020 புதன்கிழமை நாளைய தினம் வளர்பிறை பஞ்சமியும் கூட. எனவே வீட்டுப் பூஜையறையில், வராஹி நாயகியை மனதார நினைத்து விளக்கேற்றி வழிபடுங்கள். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x