

மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. 5-ல் சூரியன் இருந்தாலும் அவர் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருக்கும். பழைய நண்பர்களது தொடர்பு ஏற்படும். அதனால் அனுகூலமும் உண்டாகும். வார நடுப்பகுதியில் சந்திரன் 8-ம் இடத்தில் உலவும் நிலை அமைவதால் மன அமைதி குறையும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தலைதூக்கும். வாரக்கடைசியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 21-ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும். மாணவர்களது நிலை உயரும். 24-ம் தேதி முதல் நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 20, 21, 26.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், பொன்நிறம், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 4, 6.
பரிகாரம்: செவ்வாய்க்கும் சனிக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்துவருவது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும், 4-ல் புதனும் சுக்கிரனும், 6-ல் சனியும் 11-ல் கேதுவும் உலவுவது நல்லது. 4-ல் சூரியன் தன் சொந்த வீட்டில் உலவுவதால் நலம் புரிவார். எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். பொதுநலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். பண வரவு சற்று அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள், பங்குதாரர்களால் நலம் உண்டாகும். வீடு, நிலம், மனை, வாகனம் வாங்க வாய்ப்புக் கூடிவரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். மலை, வனாந்தரங்களில் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 21-ம் தேதி முதல் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். 24-ம் தேதி முதல் சளி, இருமல் தொல்லை ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. எதிரிகளைச் சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 20, 21.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, நீலம், ஆரஞ்சு, பச்சை.
எண்கள்: 1, 5, 6, 7. 8, 9.
பரிகாரம்:
துர்கா கவசம் படிப்பது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. அரசு சம்பந்தமான காரியங்களில் வெற்றி கிட்டும். மனோபலம் கூடும். நிர்வாகத் திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப் பணியாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் அடங்குவார்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். 2-ல் செவ்வாய் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. குடும்ப நலனில் கவனம் செலுத்துவது அவசியம். பண வரவு சற்று கூடவே செய்யும். குரு 3-ல் இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. நண்பர்கள், உறவினர்களால் தொல்லைகள் சூழும். செய்து வரும் தொழில் எதுவானாலும் அதிக கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 20, 21, 26.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வான்நீலம், மெரூன்.
எண்கள்: 1, 6, 7.
பரிகாரம்:
சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்யவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், குரு, சுக்கிரனும், 3-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. 2-ல் சூரியன் உலவினாலும் அவர் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். தந்தையாலும், பிள்ளைகளாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் பெருகும். முக்கியமான எண்ணங்கள் சில ஈடேற வழி பிறக்கும். பேச்சாற்றல் கூடும். பிறர் உங்களைப் போற்றுவார்கள். செல்வாக்கு உயரும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். வேற்று மொழி, மதத்தினருடனான தொடர்பு பயன்படும். வியாபாரம் பெருகும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். அலைச்சல் சற்று கூடவே செய்யும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 20, 21, 26.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4, 5, 6.
பரிகாரம்:
ஆஞ்சநேயர், திருமுருகனை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் சனியும் உலவுவது சிறப்பு. ராசிநாதன் சூரியன் ராசியிலேயே உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எதிர்ப்புகள் விலகும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். பிள்ளைகள், வாழ்க்கைத் துணை, தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசு உதவியும், சன்மானமும், சான்றிதழ்களும் கிடைக்கும். முக்கியமானவர்களின் சந்திப்பும் அவர்களால் அனுகூலமும் உண்டாகும். தாய் நலனில் அக்கறை தேவை. சுகானுபவம் குறையும். சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியம். 21-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் பெருகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 20, 21, 26.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 6, 8.
பரிகாரம்: செவ்வாய், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்யவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் செவ்வாயும், 12-ல் சுக்கிரனும் உலவுவதால் உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் அளவோடு உதவி புரிவார்கள். எதிரிகளின் கரம் வலுக் குறையும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். செந்நிறப் பொருட்கள் லாபம் தரும். கடல் சார்ந்த தொழில் லாபம் தரும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். குடும்பத்தில் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். செலவுகள் அதிகரிக்கவே செய்யும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். 21-ம் தேதி முதல் புதன் உங்கள் ராசிக்கு இடம் மாறினாலும் நலமே புரிவார். தொழிலில் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும். மாணவர்களது திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 20, 21, 26.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, நீலம்.
எண்கள்: 6, 9.
பரிகாரம்:
சிவ வழிபாடு நலம் தரும். நாகராஜரை வழிபடவும்.