பொன்னெழுத்துகளில் பகவத் கீதை

பொன்னெழுத்துகளில் பகவத் கீதை
Updated on
1 min read

பகவத் கீதையின் சுலோகங்கள் அனைத்தையும் தங்கமையில் எழுதி, அந்த புத்தகம் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்துக்குப் பரிசளிக்கப்படவுள்ளது.

இதை எழுதிய ஓவியர் முஸ்லிம் சமயத்தைச் சேர்ந்த 75 வயது முகமது யூனுஸ் ஷேக். சிகப்பு நிற மையில் ஹேண்ட்மேட் அட்டைகளில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் 168 பக்கங்கள் வருகிறது. முகமது யூனுஸ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்தப் பணியைப் பூர்த்தி செய்ய இரண்டு மாதங்கள் ஆகியுள்ளன.

சமணத் துறவி விஜய் அபயதேவ் சுரேஷ்வர்ஜி பணித்த வேலையின் கீழ் இந்த பகவத் கீதை புத்தகம் தயாராகியுள்ளது. தங்கக் கட்டியை உருக்கி வார்த்து அதிலிருந்து 754 சுலோகங்கள் எழுதப்பட்டுள்ளன.

தங்க எழுத்துகள் கொண்ட இந்த பகவத் கீதை நூலுக்கு ஆன செலவு எட்டு லட்ச ரூபாய்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in