அற்புதங்களின் உறைவிடம்

அற்புதங்களின் உறைவிடம்
Updated on
1 min read

பூரியில் அமைந்துள்ள, ஜகந்நாதர் கோயில் பல அற்புதங்களின் உறைவிடம் என்று கூறப்படுகிறது. அவற்றில் சில:

கோயில் கோபுரத்தின் உச்சியில் கட்டப்பட்டுள்ள கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

கோயில் அமைந்துள்ள இடமான பூரி என்ற நகரில் நின்று எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயில் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் காண்பவரை நோக்கியே இருக்கும்.

பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசுவது இயற்கை. ஆனால் பூரியில் இதற்கு நேர்எதிரான திசை நோக்கிக் காற்று வீசும்.

இக்கோயிலின் முதன்மை கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் கூடினாலும், குறைந்தாலும் சமைக்கப்பட்ட உணவு போறாமல் போனதும் இல்லை, மீந்து இருந்ததும் இல்லையாம்.

இக்கோயிலின் நுழைவாயிலான சிங்கத்துவாராவின் முதல்படியில் கோயிலின் உட்புறமாகக் காலெடுத்து வைத்து நுழையும்போது கடலில் இருந்து வரும் அலையோசை கேட்காது. ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக வரும்போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் கேட்கும். இதனை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in