வார ராசி பலன் 27-08-2015 முதல் 02-09-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

வார ராசி பலன் 27-08-2015 முதல் 02-09-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)
Updated on
3 min read

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 10-ல் செவ்வாயும், 11-ல் சூரியனும் குருவும் சஞ்சரிப்பதால் பொருள் வரவு கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு உயரும். அரசுப் பணியாளர்களது நிலை உயரும். முக்கியமானவர்களது தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். மூத்த சகோதர, சகோதரிகளால் நலம் பெருகும். எதிரிகள் ஏமாந்து போவார்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி பெருகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27, 29, செப்.1.

திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இள நீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7, 9.

பரிகாரம்:

துர்கை, மகாவிஷ்ணுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும், 11-ல் புதனும் ராகுவும் உலவுவது விசேஷம். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு உயரும். அரசுப்பணியாளர்களது எண்ணங்களில் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். புதிய முயற்சிகள் கைகூடும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற தொழில்களால் வருவாய் அதிகம் கிடைக்கும். பேச்சாற்றல் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நல்லவர்கள் நண்பர்கள் ஆவார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27, 29, செப்.1.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்:

ஏழரைச் சனியின் காலமிது என்பதால் சனிப் பிரீதியைத் தொடர்ந்து செய்வது அவசியம். திருமுருகனை வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசி அதிபதி குரு 9-ல், 9-ம் வீட்டுடன் சூரியனுடன் கூடி இருப்பது விசேஷம். புதன், சுக்கிரன், சனி, ராகுவின் சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடிவரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். தகவல் தொடர்புத் துறை லாபம் தரும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பிள்ளைகள் நலம் சீராகும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். என்றாலும் சுக்கிரனுடன் செவ்வாய் ஒன்று கூடி 8-ல் இருப்பதால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27, 29, செப்.1.

திசைகள்: வடக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: பச்சை, புகை நிறம், வெண்மை, கறுப்பு, இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 8.

பரிகாரம்:

செவ்வாய் மற்றும் கேதுவுக்கு அர்ச்சனை செய்யவும்்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 10-ல் சனி உலவுவது நல்லது. புதன் 9-ல் இருந்தாலும் தன் சொந்த, உச்ச, மூலத் திரிகோண ராசியில் உலவுவதால் நலம் புரிவார். இதனால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எடுத்த காரியங்களில் எப்பாடு பட்டாவது வெற்றி பெறுவீர்கள். பணப் புழக்கம் ஓரளவு சீராக இருக்கும். எதிர்ப்புகள் இருந்தாலும் அதை வெற்றி கொள்வீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோருக்கெல்லாம் சீரான வளர்ச்சி இருந்துவரும். 7-ல் சுக்கிரனும் செவ்வாயும் இருப்பதால் கணவன்-மனைவி உறவு நிலை பாதிக்கும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 8-ல் சூரியனும் குருவும் இருப்பதால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அரசுப் பணிகளில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27, 29, செப்.1.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, நீலம், மெரூன்.

எண்கள்: 5, 7, 8.

பரிகாரம்:

செவ்வாய், குரு, சுக்கிரனுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் குரு, 8-ல் புதன் உலவுவது சிறப்பு. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சாதாரணமாகவே காணப்படும். எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். பெண்களால் தொல்லைகள் சூழும். கலைத் துறையினருக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும். 29-ம் தேதி முதல் திருப்பம் உண்டாகும். மதிப்பு உயரும். அரசியல் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கும் மருத்துவர்களுக்கும் வெற்றிகள் குவியும். வானியல், ஜோதிடம் தொழிலைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். கூடும். மாணவர்களது திறமை பளிச்சிச்டும். வாரப் பின்பகுதியில் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். வீண் வம்பு வேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 29, செப்.1

திசைகள்: வடக்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பச்சை, நீலம், பொன் நிறம், செந்நிறம்.

எண்கள்: 3, 5, 8, 9.

பரிகாரம்:

சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். கெளரியை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

கோசாரப்படி சூரியனும் சுக்கிரனும் அனுகூலமாக உலவுகிறார்கள். வார முன்பகுதியில் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் உதவி புரிவார்கள். பெண் குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். கலைஞர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். தந்தையால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். வார நடுப்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். பிள்ளைகளால் சிறுசங்கடம் ஏற்பட்டு விலகும். வாரப் பின்பகுதியில் அலைச்சல் அதிகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். அதனால் மன அமைதி கிடைக்கும். தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு முன்னேற்றம் தடைபடும். ராசிநாதன் குரு 6-ல் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரும்; எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27, செப்.1.

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, இளநீலம்.

எண்கள்: 1, 6.

பரிகாரம்:

சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in