

குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில், சங்கட ஹர சதுர்த்தி வந்திருக்கிறது. இன்று 12.3.2020 சங்கடஹர சதுர்த்தி. இந்தநாளில், விநாயகப் பெருமானுக்கு வெள்ளெருக்கு மாலை, அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுங்கள். சகல சங்கடங்களும் தீரும்; கவலைகள் அனைத்தும் பறந்தோடும். கஷ்டங்கள் யாவும் விலகும்.
சிவபெருமானுக்கு மாதந்தோறும் சிவராத்திரி விசேஷம். முருகக் கடவுளுக்கு மாதந்தோறும் சஷ்டியும் கார்த்திகையும் சிறப்பு வாய்ந்தது. பெருமாளுக்கு ஏகாதசியும் மகத்துவம் வாய்ந்தது. அதேபோல், விநாயகப் பெருமானை வழிபட சங்கடஹர சதுர்த்தி நாள் மிக முக்கியமானதொரு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.
சங்கடஹர சதுர்த்தி நாளில், காலையில் இருந்து விரதம் மேற்கொள்ளலாம். அல்லது விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் மாலையில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசிக்கலாம். மேலும் அம்மன் ஆலயங்கள், சிவாலயங்களில் உள்ள விநாயகர் சந்நிதிகளுக்கும் சென்று வழிபடலாம்.
அப்போது, விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை சார்த்துவதும் வெள்ளெருக்கு மாலை சார்த்துவதும் விசேஷம். அதேபோல், வீட்டில், விளக்கேற்றி, விநாயகரை மலர்களால் அலங்கரித்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், கொழுக்கட்டை, சுண்டல் என ஏதேனும் ஒன்றைக் கொண்டு நைவேத்தியம் செய்வது மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
இன்று 12.03.2020 வியாழக்கிழமை. குருவாரம் என்று வியாழக்கிழமையைச் சொல்லுவார்கள். மாலை 4.30 முதல் 6 மணி வரை விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் நடைபெறும். .
விநாயகப் பெருமானுக்கு வெள்ளெருக்கு மாலை, அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுங்கள். சகல சங்கடங்களும் தீரும்; கவலைகள் அனைத்தும் பறந்தோடும். கஷ்டங்கள் யாவும் விலகும்.