மாசி பிறப்பில் 4 பேருக்கு தயிர்சாத பொட்டலம்

மாசி பிறப்பில் 4 பேருக்கு தயிர்சாத பொட்டலம்
Updated on
1 min read

வி.ராம்ஜி


மாசி மாதப் பிறப்பில், நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலமேனும் வழங்குங்கள். பித்ருக்களின் ஆசீர்வாதம் முழுமையாகக் கிடைக்கப்பெறுவீர்கள்.


தை மாதம் முடிந்து இன்று மாசி மாதம் பிறந்திருக்கிறது. மாசி மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில், கலைகள் பயிலவும் கிரகப்பிரவேசம் நடத்தவும் உபநயனம் செய்யவும் மிகச்சிறந்த மாதம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் மாதப் பிறப்பின் போதும் தர்ப்பணம் செய்து, முன்னோரை வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம். ஒருவருடத்துக்கு, 96 தர்ப்பணங்கள் உள்ளன என்று வலியுறுத்துகிறது.


தை மாதம் பிறந்து நேற்றுடன் நிறைவடைந்துவிட்டது. பனியும் குளிரும் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைந்து, மாசி மாதத்தின் அடுத்தடுத்த நாட்களில், முழுவதுமாகக் குறையும் தருணம் வந்துவிட்டது.


இன்று 13.02.2020 வியாழக்கிழமை மாசி மாதம் பிறந்துவிட்டது. குருவாரம் என்று சொல்லப்படும் இந்த நன்னாளில், பித்ருக்களை நினைத்து தர்ப்பணம் செய்வதும் அவர்களை நினைத்து நான்குபேருக்கேனும் தயிர்சாதப் பொட்டலம் வழங்குவது மிகுந்த புண்ணியத்தைத் தந்தருளும்.


எனவே, மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில், முன்னோரை நினைத்து, மாலையில் விளக்கேற்றுங்கள். இன்றைய நாளில், நான்குபேருக்காவது தயிர் சாதப் பொட்டலம் வழங்குங்கள். இதில் பித்ருக்கள் மகிழ்ந்து உங்களையும் உங்கள் சந்ததியினரையும் ஆசீர்வதிப்பார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in