கண்ணுக்கு ஒளியூட்டும் ஸ்லோகம்! 

கண்ணுக்கு ஒளியூட்டும் ஸ்லோகம்! 
Updated on
1 min read

வி.ராம்ஜி


கண் பார்வையால் தவித்து மருகிய சுந்தரர், பதிகம் பாடி கண்ணொளி பெற்ற சரிதம் நாம் அறிந்ததுதான்.


கண் பார்வையில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், இந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள். விரைவிலேயே கண் பார்வை சரியாகும். குணமாகும்.


கண்பார்வையில் ஒரு சிலருக்குக் குறைபாடுகள் ஏற்படலாம். அதனால், பார்க்கும் திறன் குறைந்து சிலபல சிரமங்களுக்கு ஆளாக நேரும். கண் பார்வைக் குறைபாடுகள் எதுவாக இருந்தாலும், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்லோகத்தை ஆத்மார்த்தமாகப் பாராயணம் செய்து வந்தால், கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கி பார்வையில் தெளிவு உண்டாகும்.


அந்த ஸ்லோகம் இதோ... .

லோகாச் சதுர்த்தச மஹேந்த்ர முகாச்ச தேவா:
மூர்த்தித்ரயம் முனிகணாச்ச வஸிஷ்ட முக்யா:
ஸத்யோ பவந்தி ந பவந்தி ஸமஸ்த மூர்த்தே:
உன்மீலனேன தவ தேவி நிமீலனேன.


அதாவது, ’தேவி... பக்தர்கள் கேட்கும் வரங்களை, நீ உடனுக்குடன் கொடுத்துவிடுவதால், நீ யாருக்குமே கடன்பட்டவள் இல்லை. உன்னுடைய அருளைப் பெற்ற பக்தர்களே உனக்குக் கடன்பட்டவர்கள். நீ இப்படி பக்தர்கள் எப்போது என்ன வரம் கேட்பார்களோ என்று நினைத்து, பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக உன் அழகிய விழிகளைக் கூட மூடாமல், எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கிறாய்’ என்கிறது.


இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்யுங்கள். முடிந்தபோதெல்லாம் சொல்லிவாருங்கள். சுந்தரர் அருளிய கண்ணொளி தரும் பதிகத்தையும் சொல்லிவாருங்கள். விரைவில், கண் பார்வைக் கோளாறுகள் சரியாவதை உணருவீர்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in