

கலியுகம் எப்படி இருக்கும் என்பதை அன்றே விளக்கியுள்ளது ஸ்ரீமத் பாகவத புராணப் பாடல். கலியுகத்தில் தருமம், சத்தியம், பொறாமை, தயை, அருள், ஆயுள் எல்லாம் குறைவுபடும். செல்வமுள்ளவனே சிறந்தவன், உயர்ந்தவன் எனப்படுவான். பலவான் சொல்லுவதே நீதி, தருமம். குல, மத, பேதமின்றி திருமணம் நடைபெறும். நாவன்மை உடையவனே பண்டிதர். பணக்காரன் வெல்லுவதும், ஏழை தோற்பதும் சாதாரணமாகும்.
பலவான் மன்னனாவான். மக்கள் கொடியவராவர். மழையின்மை அதனால் பஞ்சம் ஏற்படும். ஆசார நியமங்கள் அருகும். தன் குடும்பத்திற்காகவே உழைத்தல், புகழுக்காகவே தானம், தருமம், பொய், திருட்டு, களவாடல். ஆசைகள் மலிந்துவிடும்.
மக்கள் சிற்றின்பத்திலேயே உழல்வர். அற்ப குணம் பெற்று ஆண், பெண்கள் பழகுவர். கள்ள வியாபாரிகள், முதலாளி, தொழிலாளி, நாணயமின்மை, கிரகத்தர் யாசித்தல், துறவிகள் பொருளாசை முதலியன காண முடியும்.
ஸ்ரீமத் பாகவத புராணம்
கீழக்கோவளவேடு கிருஷ்ணமாச்சாரியார்
விலை ரூ. 200. ஸ்ரீசெண்பகா பதிப்பகம்,
32/B கிருஷ்ணா தெரு (பாண்டி பஜார்),
தியாகராய நகர், சென்னை- 600 017. தொலைபேசி: 044 24331510.
shreeshenbaga@gmail.com