Published : 29 Dec 2019 02:29 PM
Last Updated : 29 Dec 2019 02:29 PM

மார்கழி விசேஷங்கள்... விரதங்கள்! 


மார்கழி 14, டிசம்பர் 30, திங்கட்கிழமை. சதுர்த்தசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தலங்களில் பகற்பத்து உத்ஸவ சேவை. சதுர்த்தி விரதம்.

மார்கழி 15, டிசம்பர் 31, செவ்வாய்க்கிழமை. பஞ்சமி. நகரத்தார் பிள்ளையார் நோன்பு. ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் காளிங்க நர்த்தன காட்சி. ஆவுடையார்கோயில் மாணிக்கவாசகர் உத்ஸவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஏணிக்கண்ணன் திருக்கோலக் காட்சி.

மார்கழி 16, ஜனவரி 1, புதன்கிழமை. சஷ்டி. சிதம்பரம், லால்குடி, பேரூர், திருவையாறு, வரகூர் தலங்களில் திருவாதிரை உத்ஸவம் ஆரம்பம். பிள்ளையார் நோன்பு. தனுர் வியதீபாதம். ஆங்கிலப் புத்தாண்டு.

மார்கழி 17, ஜனவரி 2, வியாழக்கிழமை. சப்தமி. ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை. பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு. திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளிச்சப்பரத்தில் பவனி வரும் காட்சி.

மார்கழி 18. ஜனவரி 3, வெள்ளிக்கிழமை. அஷ்டமி. ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் திரிபுர சம்ஹார லீலை.

மார்கழி 19, ஜனவரி 4, சனிக்கிழமை. நவமி. ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னார் ஸ்ரீவைகுண்டம், திருவரகுண மங்கை தலங்களில் எம்பெருமான் திருவாய்மொழித் திருநாள் தொடக்கம். திருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷபாரூட தரிசனம்.

மார்கழி 20, ஜனவரி 5, ஞாயிற்றுக்கிழமை. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் மூல ஸ்தானத்தில் இருந்து நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ஜூனன் மண்டபம் எழுந்தருளல். திருக்குற்றாலம் குற்றாலநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரதோத்ஸவம்.

மார்கழி 21, ஜனவரி 6, திங்கட்கிழமை. தசமி. சர்வ பீஷ்ம வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசி. கிருத்திகை. காஞ்சி கச்சபேஸ்வரர் கொட்டா உத்ஸவம் (பொம்மலாட்ட வைபவம்). சர்வ விஷ்ணு ஆலயங்களிலும் பரமபத வாசல் திறப்புவிழா. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை. வைகுண்ட முக்கோடி ஏகாதசி.

மார்கழி 22, ஜனவரி 7, செவ்வாய்க்கிழமை. ஏகாதசி. கிருத்திகை விரதம். திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் எல்லாம் வல்ல சித்தராய்க் காட்சி தந்தருளல். இரவு வெள்ளிக்குதிரையில் சேவகனாக காட்சி தந்தருளல். நாச்சியார்கோவில் எம்பெருமான் தெப்போத்ஸவம்.

மார்கழி 23, ஜனவரி 8, புதன்கிழமை. துவாதசி. பிரதோஷம். காஞ்சி வரதராஜ பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் திருவாய்மொழித் திருநாள் உத்ஸவ சேவை.

மார்கழி 24, ஜனவரி 9, வியாழக்கிழமை. திரயோதசி. சிதம்பரம் நடராஜ மூர்த்தி அபிஷேகம். சிவகாம சுந்தரி ரதோத்ஸவம். இரவு இருவரும் ராஜசபை எனும் ஆயிரங்கால் மண்டபம் எழுந்தருளல்.

மார்கழி 25, ஜனவரி 10, வெள்ளிக்கிழமை. சதுர்த்தசி. பெளர்ணமி. திருவையாறு ஆட்கொண்டார் வடைமாலைக் காட்சி. அதிகாலையில் ஆருத்ரா தரிசனம். வடசாவித்திரி விரதம். சென்னை வடிவுடையம்மன் திருவுடையம்மன் கொடியிடையம்மன் தரிசனம் விசேஷம். சாரங்கபாணி கருடசேவை. திருநெல்வேலி நெல்லையப்பர் தாமிரசபா நடனம். திருவாலங்காடு சிவபெருமான் ரத்தின சபை நடனம்.

மார்கழி 26, ஜனவரி 11, சனிக்கிழமை. பெளர்ணமி. திருவொற்றியூர் அரைக்கட்டு உத்ஸவம். தியாகராஜர் திருநடனம். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. திருமலை சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் சுவாமிகள் ஜெயந்தி. ஸ்ரீரமண மகரிஷி ஜெயந்தி. திருவொற்றியூர் தியாகராஜர் திருநடனம்.

மார்கழி 27, ஜனவரி 12, ஞாயிற்றுக்கிழமை. பிரதமை. துவிதியை. கூடாரவல்லி திருவண்ணாமலை, திருவையாறு தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.

மார்கழி 28, ஜனவரி 13, திங்கட்கிழமை. திரிதியை. சங்கடஹர சதுர்த்தி. மதுரை கூடலழகர், திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தலங்களில் ராப்பத்து உத்ஸவ சேவை. மாலையில் விநாயகர் சந்நிதியில் சிறப்பு பூஜை, வழிபாடு.

மார்கழி 29, ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை. சதுர்த்தி விரதம். போகிப்பண்டிகை. குடந்தை ஸ்ரீசாரங்கபாணி வெண்ணெய்தாழி சேவை. ஸ்ரீபெரும்புதூர் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x