Published : 10 Dec 2019 02:57 PM
Last Updated : 10 Dec 2019 02:57 PM

கார்த்திகை தீபம் : 27 தீபமேற்றுங்கள்!

வி.ராம்ஜி


திருக்கார்த்திகை தீபத்திருநாளில், மாலையில் 27 தீபமேற்றுங்கள். 27 நட்சத்திரங்களைப் போல் தீபங்களும் ஜொலிக்க, அந்த தீபங்களைப் போலவே வாழ்க்கையும் ஒளிமயமாகத் திகழும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றுவது மிகவும் விசேஷமானது. குறிப்பாக, கார்த்திகை மாத சோமவாரத்தில் அதாவது சோம வாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் விளக்கேற்றுவது மிகுந்த பலனைத் தரும்.


அதேபோல், திருக்கார்த்திகை தீபத் திருநாளில், மாலையில் விளக்கேற்றுங்கள். வீட்டுப் பூஜையறையில் வழக்கம் போல் விளக்கேற்றுங்கள். பிறகு மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை, வாசலில் வரிசையாக விளக்கேற்றுங்கள்.


இந்த மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வரிசையாக வைத்துக்கொண்டு, விளக்கேற்றுங்கள். அப்போது நவக்கிரகங்களைக் குறிக்கும் வகையில் 9 விளக்குகளை ஏற்றலாம். அதேபோல் 12 ராசிகளைக் குறிக்கும் வகையில் விளக்கேற்றலாம்.


இதேபோல், முடிந்தால் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் விளக்கேற்றினால், கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். பாவ வினைகள் அனைத்தும் நீங்கும். புண்ணியங்கள் பெருகும் என்கின்றனர் ஆச்சார்யர்கள்.


இன்று கார்த்திகை தீபத்திருநாள் (10.12.19). செவ்வாய்க்கிழமை அன்று கார்த்திகை தீபம் வருவது கூடுதல் சிறப்பு. முருகனுக்கு உரிய நட்சத்திரம் கார்த்திகை. முருகப் பெருமானுக்கு உரிய கிழமை, செவ்வாய்க்கிழமை.


அம்மை உமையவளுக்கும் அப்பன் சிவபெருமானுக்கும் மைந்தன் முருகப்பெருமானுக்கும் உரிய செவ்வாய்க்கிழமையான இன்று, கார்த்திகை தீப நாளில், விளக்கேற்றி வழிபடுங்கள். உங்கள் பிரார்த்தனையை மனதாரச் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்.


வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x